“You will arise and have compassion on Zion, for it is time to show favor to her; the appointed time has come. For her stones are dear to your servants; her very dust moves them to pity.” Psalm 102:13-14.
Yes, our prayers for the church will be heard. The set time is come. We love the prayer meetings, and the Sunday school, and all the services of the Lord’s house. We are bound in heart to all the people of God and can truly say,
There’s not a lamb in all thy flock
I would disdain to feed
There’s not a foe before whose face
I’d fear thy cause to plead.
If this is the general feeling, we shall soon enjoy times of refreshing from the presence of the Lord. Our assemblies will be filled, saints will be revived, and sinners will be converted. This can only come of the Lord’s mercy; but it will come, and we are called upon to expect it. The time, the set time, is come. Let us bestir ourselves. Let us love every stone of our Zion, even though it may be fallen down. Let us treasure up the least truth, the least ordinance, the least believer, even though some may despise them as only so much dust. When we favor Zion, God is about to favor her. When we take pleasure in the Lord’s work, the Lord Himself will take pleasure in it.
சபையை நேசி
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர். அதற்குத் தயை செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள் மேல் வாஞ்சை வைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். சங்.102:13-14.
ஆம் நாம் நம் சபைக்காக ஏறெடுக்கும் விண்ணப்பங்கள் கேட்கப்படும். அதற்கான நேரம் வந்து விட்டது. ஆண்டவரின் வீட்டில் நடக்கும் ஜெபக்கூட்டங்களையும் ஓய்வுநாள் பள்ளியையும் மற்ற ஆராதனைகளையும் நாம் நேசிக்கிறோம். ஆண்டவரின் பிள்ளைகள் ஒவ்வொருவரோடும் நாம் அன்பினால் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
சபையலுள்ள ஒவ்வொருவரும் இவ்விதம் உணர்ந்தால் ஆண்டவரின் பிரசன்னத்தினால் புதுக்கிளர்ச்சி அடைந்து மகிழ்ச்சி அடைவோம். நம் ஆலயங்கள் நிரம்பி வழியும். பரிசுத்தவான்கள் புத்தூக்கம் பெறுவார்கள். பாவிகள் மன மாறுதல் அடைவார்கள். ஆண்டவரின் கிருபையினாலேயே இது நடைபெறும். ஆனால் நிச்சயம் நடைபெறும். அதைநாம் எதிர் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்காகக் குறித்த நேரம் வந்தது. நாம் எழுச்சி கொள்வோமாக. சீயோன் விழுந்து விட்டிருந்தாலும் அதன் ஒவ்வொரு கல்லையும் நாம் நேசிப்போமாக. மிக மிக அற்பமான உண்மையையும் ஆணையையும் விசுவாசியையும் சிலர் தூசிபோல இழிவாகக் கருதினாலும் நாம் அவற்றை மதிப்புடையவையாய் பாராட்டுவோமாக.
நாம் சீயோனை ஆதரித்தால் ஆண்டவர் அதை ஆதரிக்கும் காலம் நெருங்கி விட்டது. ஆண்டவரின் செயலில் நாம் மகிழ்ச்சி அடைவோமேயானால் ஆண்டவரே அதில் மகிழ்ச்சி அடைவார்.
Charles H. Spurgeon