“If this is so, then the Lord knows how to rescue the godly from trials and to hold the unrighteous for punishment on the day of judgment.” 2 Peter 2:9.

The godly are tempted and tried. That is not true faith which is never put to the test. But the godly are delivered out of their trials, and that not by chance, nor by secondary agencies, but by the Lord Himself. He personally undertakes the office of delivering those who trust Him. God loves the godly or godlike, and He makes a point of knowing where they are and how they fare.

Sometimes their way seems to be a labyrinth, and they cannot imagine how they are to escape from threatening danger. What they do not know, their Lord knows. He knows whom to deliver, and when to deliver, and how to deliver. He delivers in the way which is most beneficial to the godly, most crushing to the tempter, and most glorifying to Himself. We may leave the “how” with the Lord and be content to rejoice in the fact that He will, in some way or other, bring His own people through all the dangers, trials, and temptations for this mortal life to His own right hand in glory.

This day it is not for me to pry into my Lord’s secrets but patiently to wait His time, knowing this, that though I know nothing, my heavenly Father knows.

யார், எப்போது, எப்படி இரட்சிப்பது?

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். 1.பேது.2:9.

தேவபக்தியுள்ளவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். ஒரு போதும் சோதிக்கப்படாத நம்பிக்கை உண்மையான நம்பிக்கை அல்ல. தேவ பக்தியுள்ளவர்கள் சோதனையினின்று இரட்சிக்கப்படுகிறார்கள். தற்செயலாகவாவது வேறு யார் மூலமாயாவது இரட்சிக்கப்படுவதில்லை. கர்த்தரே அவர்களை இரட்சிக்கிறார். தம்மை நம்புகிறவர்களை இரட்சிப்பதை அவரே செய்கிறார். தேவபக்தியுள்ளவர்களைக் கர்த்தர் நேசிக்கிறார். அவர்கள் எங்கு எவ்விதமாக இருக்கிறார்கள் என்றும் கவனித்து வருகிறார்.

சில வேலைகளில் அவர்கள் செல்லும் வழி வளைந்து, வளைந்து போவதுபோல இருப்பதால் அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து எவ்விதமாகத் தப்புவது என்று அவர்களுக்கு நினைத்துப்பார்க்க முடிவதில்லை. அவர்கள் அறியாததை ஆண்டவர் அறிந்திருக்கிறார். யாரை, எப்போது, எப்படி இரட்சிப்பது என்று அவர் அறிந்திருக்கிறார். தேவ பக்தியுள்ளவர்களுக்கு மிக பயனுள்ளதாகவும், அக்கிரமக்காரரை முற்றிலுமாக அடக்குவதாகவும், தமக்கு மிகுந்த மகிமை அளிப்பதுமான விதத்தில் அவர் செயல்படுகிறார். ஆண்டவர் நிச்சயமாக இரட்சிப்பார் என்னும் நம்பிக்கையில் நிலைத்திருப்போமாக. தம் சொந்த மக்களை எவ்விதமாயாவது இவ்வுலக வாழ்க்கையில் அபாயங்கள், துன்பங்கள், சோதனைகளைக் கடந்து தம் வலது பக்கத்தில் மகிமையோடு வாழ்வதற்குக் கொண்டு சேர்ப்பார் என்னும் நிச்சயத்தில் திருப்தியோடு வாழ்வோமாக.

இந்நாளில் ஆண்டவரின் இரகசியங்களைத் துருவிக்கொண்டிருப்பது என் வேலையல்ல. எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் என் பரமபிதா எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்னும் நிச்சயத்துடன் அவர் குறித்திருக்கும் காலத்திற்கென்று பொறுமையுடன் காத்திருப்பேனாக!

Charles H. Spurgeon