“The people that do know their God shall be strong, and do exploits.” Daniel 11:32.
“The Lord is a man of war, Jehovah is his name.” Those who enlist under His banner shall have a Commander who will train them for the conflict and give them both vigor and valor. The times of which Daniel wrote were of the very worst kind, and then it was promised that the people of God would come out in their best colors: they would be strong and stout to confront the powerful adversary.
Oh, that we may know our God: His power, His faithfulness, His immutable love, and so may be ready to risk everything in His behalf. He is One whose character excites our enthusiasm and makes us willing to live and to die for Him. Oh, that we may know our God by familiar fellowship with Him; for then we shall become like Him and shall be prepared to stand up for truth and righteousness. He who comes forth fresh from beholding the face of God will never fear the face of man. If we dwell with Him, we shall catch the heroic spirit, and to us a world of enemies will be but as the drop of a bucket. A countless array of men, or even of devils, will seem as little to us as the nations are to God, and He counts them only as grasshoppers. Oh, to be valiant for truth in this day of falsehood.
உண்மைக்காக வீரதீரமாயிருத்தல்
தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு அதற்கேற்றபடி செய்வார்கள். தானி.11:32.
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவருடைய நாமம் அவர் படையில் இடம் பெறுகிறவர்கள் யுத்தத்திற்குப் பயிற்சி கொடுத்து வலிமையும் போராண்மையும் அளிக்கும் படைத்தலைவரை உள்ளவர்கள் ஆவார்கள். தானியேல் குறிப்பிட்ட காலம் மிகவும் பயங்கரமான காலம் ஆகும். அந்தக் காலத்தில் கடவுளின் மக்கள் சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும் வலிமை வாய்ந்த பகைவர்களை எதிர்த்து நிற்க அவர்கள் ஆற்றல் பொருந்தியவர்களாயும் வீரமிக்கவர்களாயும் இருப்பார்கள் என்றும் வாக்களிக்கப்பட்டது.
நாம் கர்த்தருக்காக எல்லாவற்றையும் இழப்பதற்குத் துணிவு உள்ளவர்களாக கர்த்தரை அவரது வல்லமையையும் நேர்மையையும் மாறாத அன்பையும் அறிந்தவர்களானால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அவர் தன்மை நம் ஆர்வத்தை ஊக்குவித்து அவருக்காக நம்மை உயிரோடிருக்கவும் மரிக்கவும் ஏவுகிறது. கர்த்தரோடு நாம் நெருங்கிய பழக்கமுடைய தோழமை உள்ளவர்களாயிருந்து அவரை நன்கு அறிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அவ்விதம் இருந்தால் நாம் அவரைப்போல் இருப்போம். உண்மையையும் நேர்மையையும் ஆதரிக்கிறவர்களாயும் இருப்போம். கர்த்தரை முகமுகமாய்த் தரிசித்து வருகிறவன் ஒருநாளும் மனிதனின் முகத்தைக்கண்டு அச்சங்கொள்ளமாட்டான். நாம் அவரோடு நெருங்கி வாழ்ந்தால் அவருடைய வீரப்பண்புகளை அடைவோம். அதற்குப் பின் ஏராளமான பகைவரும் நமக்கு மிகச் சிலர் ஆனவர்களாகவே காணப்படுவார்கள். கர்த்தர் பார்வையில் உலகமக்கள் வெட்டுக்களிகளைப்போல காணப்படுவதைப்போல ஏராளமான மக்களும் பிசாசுகளும் கூட நமக்குக் காணப்படுவார்கள். பொய்யே அதிகமாயிருக்கும் இக்காலத்தில் உண்மைக்காக வீரதீரமாயிருப்பது எவ்வளவு நல்லதாகும்.
Charles H. Spurgeon