“So Christ was offered once to bear the sins of many. To those who eagerly wait for Him He will appear a second time, apart from sin, for salvation.” Hebrews 9:28.

This is our hope. He to whom we have already looked as coming once to bear the sins of many will have another manifestation to the sons of men; this is a happy prospect in itself. But that second appearing has certain peculiar marks which glorify it exceedingly.

Our Lord will have ended the business of sin. He has so taken it away from His people and so effectually borne its penalty that He will have nothing to do with it at His second coming. He will present no sin offering, for He will have utterly put sin away.

Our Lord will then complete the salvation of His people. They will be finally and perfectly saved and will in every respect enjoy the fullness of that salvation. He comes not to bear the result of our transgressions but to bring the result of His obedience; not to remove our condemnation but to perfect our salvation.

Our Lord thus appears only to those who look for Him. He will not be seen in this character by men whose eyes are blinded with self and sin. To them He will be a terrible Judge and nothing more. We must first look to Him and then look for Him; and in both cases our look shall be life.

அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்கள்

தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபி.9:28.

இதுதான் நம் நம்பிக்கையாகும். ஏற்கெனவே பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக இவ்வுலகிற்கு வந்தவர் மறுபடியுமாக மனுமக்களிடையே வருவார். இது நாம் மகிழ்ச்சியுடன் எதிர் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியாகும். அதோடு இதைக்குறித்த சில சிறப்பியல்புகள் இது மிகவும் புகழ் வாய்ந்த நிகழ்ச்சி என்பதைக் காட்டுகின்றன.

அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக நமது ஆண்டவர் பாவத்தையே இல்லாமற் போகப்பண்ணி விடுவார். தம் மக்களிடம் இருந்து அதை முற்றாக நீக்கி விட்டபடியாலும் அதற்கான தண்டனையை மெய்யாகவே ஏற்றுக்கொண்டு விட்ட படியாலும் அவர் இரண்டாவது முறையாக வரும்போது அதைக்குறித்து வேறே ஒன்றும் செய்ய வேண்டியதிருக்காது. பாவத்திற்காக எந்தப் பலியும் செலுத்த மாட்டார். ஏனெனில் அதற்குள் அதை முற்றிலும் ஒதுக்கி விட்டிருப்பார்.

பின்னர் நம் ஆண்டவர் தம் மக்களின் இரட்சிப்பை நிறைவேற்றுவார். அவர்கள் இறுதியாகவும் பூரணமாகவும் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள். அந்த இரட்சிப்பின் நிறைவை முழுவதுமாக அனுபவிப்பார்கள். நமது பாவங்களைச் சுமந்து தீர்க்க அவர் வரப்போவதில்லை. அவருடைய கீழ்ப்படிதலின் பயனைக் கொண்டுவர வருவார். நாம் பாவிகள் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை நீக்க வரமாட்டார். நம் இரட்சிப்பைப் பூரணப்படுத்த வருவார்.

இவ்விதமாக அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் அவர் காட்சியளிப்பார். அகந்தையினாலும் பாவத்தினாலும் குருடரானவர்கள் அவர் இம்முறை வரும்போது அவரைப் பார்க்கக் கூடாதவர்களாயிருப்பார்கள். அவர்களுக்கு அவர் பயங்கரமான நியாயாதிபதியாகவே இருப்பார். நாம் முதலாவது அவரை நன்கு ஆராயவேண்டும். பின் அவரை எதிர் நோக்கியவர்களாய் இருக்க வேண்டும். அவரை ஆராய்வதும் எதிர்நோக்குவதுமே வாழ்வளிக்கும்.

Charles H. Spurgeon.