“But if the priest buy any soul with his money, he shall eat of it, and he that is born in his house: they shall eat of his meat.” Leviticus 22:11.
Strangers, sojourners, and servants upon hire were not to eat of holy things. It is so in spiritual matters still. But two classes were free at the sacred table, those who were bought with the priest’s money and those who were born into the priest’s house. Bought and born, these were the two indisputable proofs of a right to holy things.
Bought. Our great High Priest has bought with a price all those who put their trust in Him. They are His absolute property?altogether the Lord’s. Not for what they are in themselves, but for their owner’s sake they are admitted into the same privileges which He Himself enjoys, and “they shall eat of his meat.” He has meat to eat which worldlings know not of. “Because ye belong to Christ,” therefore shall ye share with your Lord.
Born. This is an equally sure way to privilege. If born in the Priest’s house we take our place with the rest of the family. Regeneration makes us fellow-heirs and of the same body, and, therefore, the peace, the joy, the glory, which the Father has given to Christ, Christ has given to us. Redemption and regeneration have given us a double claim to the divine permit of this promise.
பரிசுத்தமானவைகளை அனுபவிக்கும் உரிமை
ஆசாரியானால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும் அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம். லேவி.22:11.
பரிசுத்தமானவைகளை அந்நியனும் வீட்டைச் சேர்ந்தவனாயிராமல் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலி வேலை செய்கிறவனும் புசிக்கக் கூடாது. ஆத்துமப் பிரகாரமானவற்றிற்கும் இவ்விதி இன்றும் பொருந்துவதாகும். ஆனால் இரண்டு பிரிவினருக்கு பரிசுத்தமானவைகளைப் புசிக்கும் உரிமை உண்டு. அவர்கள் ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும் அவன் வீட்டிலே பிறந்தவனும் ஆகும். கொள்ளப்பட்டவனுக்கும் வீட்டிலே பிறந்தவனுக்கும் பரிசுத்தமானவைகளைப் புசிக்க உள்ள உரிமை மறுக்க முடியாததாகும்.
கொள்ளப்பட்டவர்கள் தம்மேல் நம்பிக்கை உள்ளவர்களையெல்லாம் நம் உத்தம பிரதான ஆசாரியார் விலைக்கு வாங்கிவிட்டார். அவர்கள் முழுவதும் அவருக்கே உரியவர்கள் அவர்களில் இருக்கும் எந்தது; தன்மைகளுக்காகவும் அல்லாமல் அவர்களைக் கொண்டவருக்காகவே அவர் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்கும் உரிமை பெறுகிறார்கள். ஆகவே அவர்களும் அவருடைய ஆகாரத்தில் புசிக்கலாம். உலகியல் சார்ந்த வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அறியாத ஆகாரம் அவரிடம் இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாக இருக்கின்றபடியினாலே உங்கள் ஆண்டவரோடு எல்லாவற்றையும் அனுபவிப்பீர்கள்.
பிறந்தவர்கள் தனிச்சலுகை பெறுவதற்கு இதுவும்; நிச்சயமான ஓரு வழியாகும். ஆசாரியனுடைய குடும்பத்தில் பிறந்தால் குடம்பத்தில் உள்ள மற்றவர்களைப்போல உரிமைகளையயும் அடைகிறோம். மறுபிறப்பு நம்மை உடன் சுதந்தரராயும் ஒரே விதமான சரீரம் உள்ளவர்களாயும் ஆக்குகிறது. ஆகையால் பிதா கிறிஸ்துவுக்குக் கொடுத்துள்ள சமாதானம் சந்தோஷம் மகிமை யாவையும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ளார். இயேசுவில் கிடைக்கும் மீட்பும் மறுபிறப்பும் இந்த வாக்குறுதி நமக்கு இரட்டிப்பு உரிமை அளிக்கின்றன.
Charles H. Spurgeon