“The Lord bless you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his face toward you and give you peace.” Numbers 6:24.

This first clause of the high priest’s benediction is substantially a promise. That blessing which our great High Priest pronounces upon us is sure to come, for He speaks the mind of God.

What a joy to abide under the divine blessing! This puts a gracious flavor into all things. If we are blessed, then all our possessions and enjoyments are blessed; yea, our losses and crosses and even our disappointments are blessed. God’s blessing is deep, emphatic, effectual. A man’s blessing may begin and end in words, but the blessing of the Lord makes rich and sanctifies. The best wish we can have for our dearest friend is not “may prosperity attend thee,” but “the Lord bless thee.”

It is equally a delightful thing to be kept of God; kept by Him, kept near Him, kept in Him. They are kept indeed whom God keeps; they are preserved from evil; they are reserved unto boundless happiness. God’s keeping goes with His blessing, to establish it and cause it to endure.

The author of this little book desires that the rich blessing and sure keeping here pronounced may come upon every reader who may at this moment be looking at these lines. Please breathe the text to God as a prayer for His servants.

அவர் ஆசீர்வதித்துக் காக்கிறார்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக்கடவர். எண்.6:24.

பிரதான ஆசாரியரின் ஆசீர்வாதத்தின் முதற்பாகம் மொத்தத்தில் ஒரு வாக்குறுதியாகும். நம் பிரதான ஆசாரியர் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதம் உண்மையாகவே நிறைவேறும், ஏனெனில் அவர் கடவுள் நினைப்பதைக் கூறுகிறார்.

பரம ஆசீர்வாதத்தைப் பெறுவது எவ்வளவு மகிழ்ச்சியாகும் என்று நினைத்துப் பாருங்கள்? இதனால் எல்லாம் கிருபை பெற்றவையாகும். நாம் ஆசீர்வதிக்கப்பட்டால் நம் உடமைகளும் நம் அனுபவங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவையாய் இருக்கும். அது மட்டுமல்ல நம் நாட்டங்களும் கஸ்டங்களும் ஏமாற்றங்களும் கூட ஆசீர்வதிக்கப்பட்டவையாய் இருக்கும். கடவுளுடைய ஆசீர்வாதம் மதிப்பிட்டுரைக்க முடியாத அளவு ஆழமானது, மெய்யானது. மனிதனுடைய ஆசீர்வாதம் வெறும் வாய்ச்சொல்லாயிருக்கும். ஆனால் கடவுளுடைய ஆசீர்வாதம் மகிழ்வூட்டும் புனிதப்படுத்தும். நம் நண்பரில் சிறந்தவரை நீ செல்வச்செழிப்புப் பெற்று வாழ்வாயாக! என்று வாழ்த்துவதைவிட கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்துவதே மேல்.

அதேபோல் கர்த்தர் நம்மைப் பேணிக் காப்பதும் மகிழ்வூட்டுவதாகும். அவர் நம்மைத் தம்மில் தம் அருகில் வைத்துப் பேணிக்காப்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்த நிலையாகும் என்று நினைத்துப் பாருங்கள். கடவுள் காக்கிறவர்கள் உண்மையாகவே காப்பாற்றப்பட்டவர்கள். அவர்கள் தீமையிலிருந்து காக்கப்படுவார்கள். அளவற்ற மகிழ்ச்சி அடைவதற்கென்று ஒதுக்கப்பட்டவர்களுமாயிருப்பார்கள். கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் இப்போதிலிருந்து நித்திய காலமாகக் காணப்படுவோம். இந்த நேரத்தில் இந்த வரிகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுக் காக்கப்பட வேண்டுமென்று இச்சிறு நூலை எழுதியவர் விரும்புகிறார்