“See, the Lord your God has set the land before you. Go up, take possession, as the Lord, the God of your fathers, has told you. Do not fear or be dismayed.” Deuteronomy 1:21.
There is a heritage of grace which we ought to be bold enough to win for our possession. All that one believer has gained is free to another. We may be strong in faith, fervent in love, and abundant in labor; there is nothing to prevent it; let us go up and take possession. The sweetest experience and the brightest grace are as much for us as for any of our brethren; Jehovah has set it before us; no one can deny our right; let us go up and possess it in His name.
The world also lies before us to be conquered for the Lord Jesus. We are not to leave any country or corner of it unsubdued. That slum near our house is before us, not to baffle our endeavors, but to yield to them. We have only to summon courage enough to go forward, and we shall win dark homes and hard hearts for Jesus. Let us never leave the people in a lane or alley to die because we have not enough faith in Jesus and His gospel to go up and possess the land. No spot is too benighted, no person so profane as to be beyond the power of grace. Cowardice, begone! Faith marches to the conquest. போய் உன் சொத்தைக் கைப்பற்றிடு
இதோ உன் தேவனாகிய கர்த்தர் அந்தத் தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார். உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே நீ போய் அதைச் சுதந்தரித்துக் கொள். பயப்படாமலும் கலங்காமலும் இரு. உபா.1:21.
கிருபையின் மரபுரிமையாக நாம் பெறவேண்டியது ஒன்று இருக்கிறது. அதை நம் உரிமையாக்கிக் கொள்ள நாம் துணிவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். விசுவாசி ஒருவர் அடைந்தவையெல்லாம் மறறொருவர் இலவசமாய் அடையக் கூடியவையாய் இருக்கின்றன. நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கலாம். அன்பில் ஊக்கமாய் இருக்கலாம் அதிகமாய்ப் பிரயாசப்பட்டிருக்கலாம். இவற்றிற்குத் தடையாக ஒன்றும் இருப்பதில்லை. நம் சகோதரரில் ஒருவர் அடைந்த அரிய அனுபவமும் சிறப்பு வாய்ந்த கிருபையும் நமக்கு உரியதாய் இருக்கிறது. யேகோவா அவற்றை நம் முன் வைத்திருக்கிறார். நம் உரிமையை யாரும் மறுக்க முடியாது. நாம் போய் அவர் நாமத்தில் அவற்றைச் சுதந்தரித்துக் கொள்வோமாக!
உலகமும் இயேசுவுக்கென்று சுதந்தரிக்கப்பட இருக்கிறது. எந்த நாட்டையாவது நாட்டின் கோடியைக்கூடவாவது நாம் சுதந்தரிக்காமல் விடக்கூடாது. நம் வீட்டின் அருகிலுள்ள குடிசைப் பகுதி நம் முயற்சிகளில் திகைப்பு ஊட்டுவதற்கு அல்லாமல் பயன் அளிக்கவே அங்கு இருக்கிறது. நாம் முன்னேறுகிறவர்களில் தைரியம் உள்ளவர்களாய் இருந்தால் இருண்ட குடும்பங்களையும் கடினமான இருதயங்களையும் ஆண்டவருக்கென்று ஆதாயப்படுத்துகிறவர்களாய் இருப்போம். இயேசுவின் மேலும் போய் சுதந்தரித்துக் கொள் என்று அவர் கொடுத்துள்ள நற் செய்தியின் மேலும் நமக்கு நம்பிக்கை இல்லாதபடியால் சந்துபொந்துகளிலுள்ள மக்கள் மரணமடைய விட்டுவிடாமல் இருப்போமாக! கிருபையினால் மீட்கப்படாதபடி எந்த இடமும் பாழ்பட்டுக் கிடக்கவுமில்லை, யாரும் தூய்மையற்றும் இல்லை. கோழைத்தனத்தை அகற்றிவிட்டு வெற்றி பெற முன்செல்வோமாக!
Charles H. Spurgeon