“Be strong and very courageous. Be careful to obey all the law my servant Moses gave you; do not turn from it to the right or to the left, that you may be successful wherever you go.” Joshua 1:7.
Yes, the Lord will be with us in our holy war, but He demands of us that we strictly follow His rules, Our victories will very much depend upon our obeying Him with all our heart, throwing strength and courage into the actions of our faith. If we are halfhearted we cannot expect more than half a blessing.
We must obey the Lord with care and thoughtfulness. “Observe to do” is the phrase used, and it is full of meaning. This is referred to every part of the divine will; we must obey with universal readiness. Our rule of conduct is “according to all the law.” We may not pick and choose, but we must take the Lord’s commands as they come, one and all. In all this we must go on with exactness and constancy Ours is to be a straightforward course which bends neither to the right nor to the left. We are not to err by being more rigid than the law, nor turn out of levity to a more See and easy way. With such obedience there will come spiritual prosperity. O Lord, help us to see if it be not even so! We shall not test Thy promise in vain. வாழ்வில் வளம் பெறுவதற்கான வழிகள்
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக! யோசு.1:7.
நம் போராட்டத்தில் ஆண்டவர் நம்மோடு இருப்பார். ஆனால் அவர் கொடுத்திருக்கும் விதிகளை நாம் கண்டிப்பாகக் கைக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். நாம் அடையும் வெற்றி நம் முழுமனதுடனும் பெலனுடனும் தைரியத்துடனும் அவருக்குக் கீழ்ப்படிவதைப் பொறுத்தே இருக்கிறது. நாம் அரைமனதுடன் செயல்ப்பட்டால் நாம் முழு ஆசீர்வாதத்தையும் பெறமுடியாது. பாதியளவு ஆசீர்வாதமே பெறுவோம்.
நாம் கவனத்தோடும் முன்னாலோசனையோடும் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பொருள் நிறைந்தது. இது ஆண்டவருடைய திருச்சித்தத்துக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிவதைக் குறிக்கின்றது. நாம் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் ஆயது;தமாயிருக்க வேண்டும். நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க வேண்டும். நமக்கு விருப்பமானவற்றை மட்டும் செய்தாற்போதும் என்று சொல்லப்படவில்லை. எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருக்க வேண்டும். எல்லாவற்றையும் திட்டவட்டமாயும் உறுதியுடனும் செய்யவேண்டும். வலது இடது புறம் சாயாமல் நேரான பாதையில் நடந்து செல்ல வேண்டும். யோசனையில்லாமல் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் கூடாது. அதைக்குறித்து அக்கறையில்லாமல் நம் இஷ்டம் போல் நடக்கவும் கூடாது. இவ்விதமான கீழ்ப்படிதலினால் ஆத்துமப்பிரகாரமாக வெற்றி கிட்டும். ஆண்டவரே அது உண்மையென்று எங்களைக் கண்டறியச் செய்யும். உம்வாக்குறுதி உண்மையா என்று நாங்கள் சோதனை செய்யத் துணியோம்.
Charles H. Spurgeon