Then people will say, “Surely the righteous still are rewarded; surely there is a God who judges the earth.” Psalm 58:11.

God’s judgments in this life are not always clearly to be seen, for in many cases one event happeneth alike to all. This is the state of probation, not of punishment or reward. Yet at times God works terrible things in righteousness, and even the careless are compelled to own His hand.

Even in this life righteousness has that kind of reward which it prefers above all others, namely, the smile of God, which creates a quiet conscience. Sometimes other recompenses follow, for God will be in no man’s debt. But, at the same time, the chief reward of the righteous lies in the hereafter.

Meanwhile, on a large scale, we mark the presence of the great Ruler among the nations. He breaks in pieces oppressive thrones and punishes guilty peoples. No one can study the history of the rise and fall of empires without perceiving that there is a power which makes for righteousness and, in the end, brings iniquity before its bar and condemns it with unsparing justice. Sin shall not go unpunished, and goodness shall not remain unrewarded. The Judge of all the earth must do right. Therefore, let us fear before Him and no more dread the power of the wicked.

நீதிமானுக்குப் பலன் உண்டு

அப்பொழுது மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும் மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ் செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங்.58:11.

இல் வாழ்க்கையில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு தெளிவாய்க் காணப்படுவதில்லை. எப்படியெனில் ஒரு நிகழ்ச்சியினால் பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இது தெரிந்தாயும் நிலையாகும். தண்டனை அல்லது பலன் அளிக்கப்படும் நிலையல்ல. ஆயினும் சிவேளைகளில் கடவுள் நீதியை நிலைநிறுத்த பயங்கரமான காரியங்களைச் செய்கிறார். எல்லாவற்றைக் குறித்தும் அசட்டையாயிருப்பவர்கள் கூட அது அவருடைய செயல் என்று ஒத்துக் கொள்ளுகிறார்கள்.

இந்த வாழ்க்கையிலும் நீதிமான் எல்லாவற்றுக்கும் மோலானதாகக் கருதும் பலனைப் பெறுகிறான். அது கடவுளின் பூரண திருப்தியாகும். அது அமைதியாக மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட நிலையை உண்டாக்குகிறது. பின்வேறு சில நற்காரியங்களையும் கைம்மாறாகப் பெறுகிறோம். ஏனெனில் கடவுள் ஒருநாளும் ஒருவருக்கும் கடனாளியாக இருப்பதில்லை. ஆயினும் நீதிமானுக்கு இனிவரும் காலத்தில்தான் பலன் கிட்டும்.

அதுவரை பல நாட்டினருக்கும் இடையே மாமன்னரின் கிரியைகளைக் காண்கிறோம். அவர் கொடுங்கோன்மையான சிங்காசனங்களை உடைத்துப் போடுகிறார். குற்றவாளிகளைத் தண்டிக்கிறார். பேரரசுகள் தோன்றி அழிவதை வரலாற்றின் மூலமாய் அறிபவர்கள் நீதியை விரும்பி இறுதியில் அநீதியைத் தடுத்து நிறுத்தி எப்பக்கமும் சாயாத நீதியின்படி தீர்ப்பு அளிக்கும் சக்தி உண்டென்பதைத் திட்டமாய் அறிவார்கள். பாவத்திற்குத் தண்டனை வராமற்போகாது. அதே போல நற்குணத்திற்குப் பலன் வராமற்போகாது. உலகத்தின் நியாயாதிபதி சரியானதையே செய்யவேண்டும். ஆகையால் அவருக்குப் பயப்படுவோமாக! தீயவர்களின் ஆற்றலைக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

Charles H. Spurgeon.