“But the word of the Lord endures forever.” And this is the word that was preached to you.” 1 Peter 1:25.
All human teaching and, indeed, all human beings shall pass away as the grass of the meadow; but we are here assured that the Word of the Lord is of a very different character, for it shall endure forever.
We have here a divine gospel; for what word can endure forever but that which is spoken by the eternal God?
We have here an ever-living gospel, as full of vitality as when it first came from the lips of God; as strong to convince and convert, to regenerate and console, to sustain and sanctify as ever it was in its first days of wonder-working.
We have an unchanging gospel which is not today green grass and tomorrow dry hay but always the abiding truth of the immutable Jehovah. Opinions alter, but truth certified by God can no more change than the God who uttered it.
Here, then, we have a gospel to rejoice in, a word of the Lord upon which we may lean all our weight. “For ever” includes life, death, judgment, and eternity. Glory be to God in Christ Jesus for everlasting consolation. Feed on the word today and all the days of thy life.
புனிதமானது, நித்தியமானது, மாறாதது
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். 1.பேது.1:25.
மக்களுடைய போதனைகளும் மக்களும் வயல்வெளியின் புல்லைப்போல் அழிந்துபோகலாம். ஆனால் கர்த்தருடைய வசனமோ அப்படிப்பட்டதல்ல என்று இங்கு நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
புனிதமான நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நித்திய கடவுளால் பேசப்பட்டதல்லாமல் வேறெந்த வார்த்தை நித்திய காலமாய் நிலைத்திருக்கக் கூடும்?
நித்திய காலமாய் உயிர் உள்ளதாய் இருக்கும் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது கர்த்தரின் வாயிலிருந்து வந்தபோது இருந்த உயிர்ப்புடனேயே எப்போதும் இருக்கிறது. ஆதிநாட்களில் வியப்பூட்டும் செயல்களைச் செய்ததுபோல் இப்போதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பச்செய்யவும், மனமாற்றம் அடையச் செய்யவும், சீர்திருத்தவும், ஆறுதல்படுத்தவும், ஊறுதிப்படுத்தி நிலைநிறுத்தவும், புனிதமாக்கவும் வல்லது.
மாறாததான நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது இன்று பசுமையாய் இருந்து நாளைக்கு வாடிப்போவதில்லை. ஆனால் நிலையான யேகோவாவின் உறுதியான உண்மையாய் இருக்கிறது. கருத்துக்கள் மாறலாம். ஆனால் கடவுளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அவற்றைக் கூறினவரைப் போலவே இருக்கின்றன.
மகிழ்ச்சி அளிக்கும் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாம் முழுவதுமாகச் சார்ந்து கொள்ளக் கூடிய நம் ஆண்டவரின் வார்த்தையாகும். என்றென்றைக்கும் என்பது வாழ்வையும், மரணத்தையும், நியாயத்தீர்ப்பையும், நித்தியத்தையும் குறிக்கிறது. கிறிஸ்து இயேசுவில் நித்திய ஆறுதலுக்காக கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! நீ இன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கர்த்தரின் வசனத்தை உட்கொள்வாயாக!
Charles H. Spurgeon