““Come to me, all you who are weary and burdened, and I will give you rest.” Matthew 11:28.

We who are saved find rest in Jesus. Those who are not saved will receive rest if they come to Him, for here He promises to “give” it. Nothing can be freer than a gift; let us gladly accept what He gladly gives. You are not to buy it, nor to borrow it, but to receive it as a gift. You labor under the lash of ambition, covetousness, lust, or anxiety: He will set you free from this iron bondage and give you rest. You are “laden,” yes, “heavy laden” with sin, fear, care, remorse, fear of death; but if you come to Him He will unload you. He carried the crushing mass of our sin that we might no longer carry it. He made Himself the great Burden-bearer, that every laden one might cease from bowing down under the enormous pressure.

Jesus gives rest. It is so. Will you believe it? Will you put it to the test? Will you do so at once? Come to Jesus by quitting every other hope, by thinking of Him, believing God’s testimony about Him, and trusting everything with Him. If you thus come to Him the rest which He wilt give you will be deep, safe, holy, and everlasting. He gives a rest which develops into heaven, and He gives it this day to all who come to Him.

இளைப்பாறுதல் ஒரு நன்கொடை

வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்.11:28.

இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவில் இளைப்பாறுதல் அடைந்துள்ளோம். இரட்சிக்கப்படாதவர்கள் அவரண்டை வந்தால் இளைப்பாறுதலைப் பெறுவார்கள். ஏனெனில் மேற்கூறிய வசனத்தில் அதைத் தருவதாக அவர் வாக்களிக்கிறார். எதுவும் நன்கொடையைவிட இலவசமானதாக இருக்கமுடியாது. அவர் மகிழ்ச்சியோடு கொடுப்பதை, நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோமாக. புகழார்வம், பிறர் பொருளை அடைய இச்சை, சிற்றின்ப அவா, ஏக்கம் இவற்றால் ஏவப்பட்டு நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். இந்த இரக்கமற்ற அடிமைத்தனத்திலிருந்து இயேசு உங்களை விடுதலை செய்து, உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பார். நீங்கள் பாரஞ்சுமக்கிறவர்களாயிருக்கிறீர்கள். ஆம், பாவம், அச்சம், கவலை, கண்ணீர், மரணபயம் ஆகிய பாரங்களைச் சுமக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவரண்டை வந்தால், அவர் உங்கள் பாரங்களை இறக்கிவிடுவார். நாம் இனிமேலும் பாவச்சுமையைத் தூக்காதவாறு, பாரமாக நம்மை அழுத்திய பாவச் சுமையை அவர் சுமந்தார். பாரமான சுமையினால் அழுத்தப்பட்டு, வருத்தப்படுகிறவர்கள் ஒவ்வொருவரும் வருத்தப்படாமலிருக்க அவர் தம்மையே சுமைதாங்கி ஆக்கினார்.

இயேசு இளைப்பாறுதல் அளிக்கிறார். இது உண்மை. இதை நீங்கள் நம்புகிறீர்களா? இதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உடனே செயல்படுங்கள். மற்றவைகளை நம்புவதை விட்டுவிட்டு, இயேசுவைப் பற்றிய எண்ணம் மட்டுமே உள்ளவர்களாயும், அவர் தம்மைக் குறித்துக்கொடுத்துள்ள சான்றுறுதியையும், அவரைப்பற்றிய எல்லாவற்றையுமே நம்பினவர்களாயும் அவரண்டை வாருங்கள். அவ்விதம் வரும்போது அவர் கொடுக்கும் இளைப்பாறுதல் ஆழமிக்கதாயும், பாதுகாப்பு அளிக்கிறதாயும், புனிதமானதாயும், நித்தியமானதாயும் இருக்கும். மோட்சநிலை ஏற்படுத்தக்கூடிய இளைப்பாறுதலை அவர் அளிக்கிறார். இன்று அவரண்டை வரும் எல்லாருக்கும் அதை அளிக்கிறார்.

Charles H. Spurgeon