“For the needy shall not always be forgotten: the expectation of the poor shall not perish for ever.” Psalm 9:18.
Poverty is a hard heritage; but those who trust in the Lord are made rich by faith. They know that they are not forgotten of God, and though it may seem that they are overlooked in His providential distribution of good things, they look for a time when all this shall be righted. Lazarus will not always lie among the dogs at the rich man’s gate, but he will have his recompense in Abraham’s bosom. Even now the Lord remembers His poor but precious sons, “I am poor and needy; yet the Lord thinketh upon me,” said one of old, and it is even so. The godly poor have great expectations. They expect the Lord to provide them all things necessary for this life and godliness; they expect to see things working for their good; they expect to have all the closer fellowship with their Lord, who had not where to lay His head; they expect His second advent and to share its glory. This expectation cannot perish, for it is laid up in Christ Jesus, who liveth forever, and because He lives, it shall live also. The poor saint singeth many a song which the rich sinner cannot understand. Wherefore, let us, when we have short commons below, think of the royal table above.
விசுவாசத்தினால் வரும் செல்வம்
எளியவன் என்றென்றைக்கும் மறக்கப்படுவதில்லை. சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. சங்.9:18.
மரபுரிமையால் ஏழ்மை நிலையில் இருப்பது கடினமானதாகும். ஆனால் கடவுளை நம்புகிறவர்கள் விசுவாசத்தினால் செல்வம் உடையவர்கள் ஆகிறார்கள். கடவுள் தங்களை மறந்துவிடவில்லை என்று அவர்கள் அறிகிறார்கள். நற்காரியங்களைப் பகிர்ந்தளிப்பதில் கடவுள் தம் சித்தப்படி அவர்களைக் கவனிக்கத் தவறிவிட்டதுபோல் காணப்பட்டாலும் யாவும் சரியாக்கப்படும் காலத்தை அவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள். லாசரு எப்போதுமே பணக்காரன் வாசல் அருகே, நாய்கள் மத்தியில் இருக்கமாட்டான். ஆபிரகாம் மடியியில் இருக்கும் நிலையை ஒருநாள் அடைவான்.
இப்போதும்கூட ஏழைகளாய் ஆனால், கடவுளுக்கு மதிப்புமிக்கவர்களாய் இருக்கும் மக்களை அவர் நினைவில் வைத்து இருக்கிறார். ஏனெனில் அந்நாட்களில் இருந்த ஒருவர் நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார் என்கிறார். இக்காலத்திலும் அது உண்மையாய் இருக்கிறது. கடவுள் பற்று உள்ள ஏழைகள் மகத்தானவைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்த வாழ்க்கைக்கும் கடவுள் பற்றுக்கும் தேவையான எல்லாவற்றையும் அவர் கண்டிப்பாக அருளுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நன்மைக்காக எல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் ஆண்டவரோடு இன்னும் நெருங்கிய தோழமை இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர் இரண்டாம் முறை வருவதையும், அந்த மகிமையில் பங்குபெறுவதையும் எதிர்நோக்கியிருக்கிறார்கள், இந்த எதிர்பார்க்குதல் அழிந்துவிடாது. ஏனெனில் அது நித்தியகாலமாக உயிரோடிருக்கும் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறது. அவர் நிலைத்திருப்பதுபோல அதுவும் நிலைத்திருக்கும். பணக்காரரான பாவிக்கு விளங்காத பல பாடல்களை ஏழையான பாவி பாடுகிறான். இவ்வுலகில் குறைவு இருந்தால் மேலுலகில் ஆயத்தமாயிருக்கும் உயர் நிலையை நினைத்துப் பார்ப்போமாக.
Charles H. Spurgeon