And God said, “I will be with you. And this will be the sign to you that it is I who have sent you: When you have brought the people out of Egypt, you will worship God on this mountain.” Exodus 3:12.
Of course, if the Lord sent Moses on an errand, He would not let him go alone. The tremendous risk which it would involve and the great power it would require would render it ridiculous for God to send a poor lone Hebrew to confront the mightiest king in all the world and then leave him to himself. It could not be imagined that a wise God would match poor Moses with Pharaoh and the enormous forces of Egypt. Hence He says, “Certainly I will be with thee,” as if it were out of the question that He would send him alone.
In my case, also, the same rule will hold good. If I go upon the Lord’s errand with a simple reliance upon His power and a single eye to His glory, it is certain that He will be with me. His sending me binds Him to back me up. Is not this enough? What more can I want? If all the angels and arch-angels were with me. I might fail; but if He is with me, I must succeed. Only let me take care that I act worthily toward this promise. Let me not go timidly, halfheartedly, carelessly, presumptuously. What manner of person ought he to be who has God with him! In such company it behoveth me to play the man and, like Moses, go in unto Pharaoh without fear.
ஒன்றைக் குறித்தும் அச்சம் இல்லாதவன்
அவர் நான் உன்னோடே இருப்பேன்…. என்றார். யாத்.3:12.
கடவுளே மோசேக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்புவதால் அவர் மோசேயைத் தனியே அனுப்பமாட்டார். அது அபாயமிக்க வேலையாகும். அதைச் செய்வதற்கு மிகுந்த ஆற்றல் தேவை. அப்படியிருக்க உலகிலேயே வலிமை மிக்க அரசை எதிர்த்து நிற்க ஏழை எபிரெயன் ஒருவனைத் தனியே அனுப்பினால் அது ஏளனத்துக்கு உரியதாகிவிடும். தெய்வீக ஆற்றல் உடைய கடவுள் பார்வோனையும் எகிப்தின் வலிமையான படைகளையும் ஏழை மோசேக்கு நிகராக்குவது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாகும். ஆகையால் இதில் கேள்விக்கே இடம் இல்லாதபடி அவர் நான் உன்னோடே இருப்பேன் என்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில்கூட இது உண்மையாகும். கடவுளின் வேலையாகச் செல்லும்போது அவர் ஆற்றல்மேல் சார்ந்தவனாய், அவர் மகிமை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு சென்றால் அவர் நிச்சயமாக என்னோடு இருப்பார். அவரே என்னை அனுப்புவதானால் என்னை ஆதரிப்பது அவர் பொறுப்பாகும். இது போதும் அல்லவா? இதைவிட அதிகமாக இன்னும் என்ன வேண்டும்? எல்லா தூதர்களும் என்னோடு இருந்தால்கூட என் வேலையில் நான் தோல்வி அடையலாம். ஆனால் அவர் என்னோடு இருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். இந்த வாக்குறுதிக்குத் தகுந்தபடி நான் செயல்படவேண்டும் என்பதைக் குறித்து மட்டுமே கவனமாயிருக்கவேண்டும். பயத்தோடாவது, அரைமனதோடாவது, கவனம் இல்லாமலாவது, தகாத துணிவோடு நான் போகக்கூடாது. தனக்குத் துணைவராகக் கடவுளைப் பெற்றிருக்கும் மனிதன் எப்படிப்பட்டவனாய் இருக்கவேண்டும்? அவ்விதமான சிறந்த துணைவரைக் கொண்டிருக்கும்போது ஆண்மையோடு அச்சமின்றி மோசேயைப்போல பார்வோனிடம் போவது இன்றியமையாததாகும்.
Charles H. Spurgeon