“Be careful to obey all these regulations I am giving you, so that it may always go well with you and your children after you, because you will be doing what is good and right in the eyes of the Lord your God.” Deuteronomy 12:28.
Though salvation is not by the works of the law, yet the blessings which are promised to obedience are not denied to the faithful servants of God. The curses our Lord took away when He was made a curse for us, but no clause of blessing has been abrogated.
We are to note and listen to the revealed will of the Lord, giving our attention not to portions of it but to “all these words.” There must be no picking and choosing but an impartial respect to all that God has commanded. This is the road of blessedness for the Father and for His children. The Lord’s blessing is upon His chosen to the third and fourth generation. If they walk uprightly before Him, He will make all men know that they are a seed which the Lord has blessed. No blessing can come to us or ours through dishonesty or double dealing. The ways of worldly conformity and unholiness cannot bring good to us or ours. It will go well with us when we go well before God. If integrity does not make us prosper, knavery will not. That which gives pleasure to God will bring pleasure to us.
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெறுவோம்
நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள் (உபா.12:28).
இரட்சிப்பு நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினால் ஏற்படா விட்டாலும் கீழ்ப்படிகிறவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் ஆண்டவரின் உண்மையான அடியார்களுக்கு மறுக்கப்படவில்லை. நம் ஆண்டவர் நமக்காகச் சாபமானபோது நம் சாபங்களை ஒழித்து விட்டார். ஆனால் எந்த ஆசீர்வாதமும் ஒழிக்கப்படவில்லை.
ஆண்டவரின் சித்தம் வெளிப்படுத்தப்படும்போது நாம் உற்றுக் கவனிக்க வேண்டும். அதின் சில பகுதிகளை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆண்டவரின் வார்த்தைகள் யாவையும் கவனித்துக் கேட்கவேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. கடவுள் கட்டளை இட்டவைகளையெல்லாம் கைக்கொள்ள மனதுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தகப்பனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதத்துக்கான வழி இதுவேயாகும். ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு மூன்றாம் நான்காம் தலைமுறை வரை இருக்கும். அவர்கள் அவர் முன்பாய் உத்தமமாய் நடந்தால் அவர்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்ற சந்ததியினர் என்று எல்லா மக்களும் அறியச் செய்வார்.
நேர்மையற்ற நடத்தையினாலாவது வஞ்சகத்தினாலாவது எந்த ஆசீர்வாதமும் பெற முடியாது. உலகத்தோடு ஒப்புரவு கொண்டு புனிதமற்ற வழிகளிலும் வாழ்வதால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. கடவுளுக்கு முன்பாக நாம் நல்லவர்களாய் இருந்தால் எல்லாம் நம் நன்மைக்கேதுவாய் இருக்கும். நேர்மையாய் நடப்பதால் நம் வாழ்வு வளம்பெறவில்லையென்றால் நாணயக்கேட்டினால் வளம்பெறாது. கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிப்பவை நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
Charles H. Spurgeon