“I am with you and will watch over you wherever you go, and I will bring you back to this land. I will not leave you until I have done what I have promised you.” Genesis 28:15.
Do we need journeying mercies? Here are choice ones?God’s presence and preservation, In all places we need both of these, and in all places we shall have them if we go at the call of duty, and not merely according to our own fancy. Why should we look upon removal to another country as a sorrowful necessity when it is laid upon us by the divine will? In all lands the believer is equally a pilgrim and a stranger; and yet in every region the Lord is His dwelling place, even as He has been to His saints in all generations. We may miss the protection of an earthly monarch, but when God says, “I will keep thee,” we are in no real danger. This is a blessed passport for a traveler and a heavenly escort for an emigrant.
Jacob had never left his father’s room before; he had been a mother’s boy and not an adventurer tike his brother. Yet he went abroad, and God went with him. He had little luggage and no attendants; yet no prince ever journeyed with a nobler bodyguard. Even while he slept in the open field, angels watched over him, and the Lord God spoke to him. If the Lord bids us go, let us say with our Lord Jesus, “Arise, let us go hence.”
தெய்வீகமான பயணத் துணைவர்
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து… (ஆதி.28:15).
நம் பயணத்தில் நமக்கு உதவி வேண்டுமா? இங்கே சிறப்பான இரண்டு உதவி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளன. அவை கடவுள் நம்மோடு இருப்பார். அவர் நம்மைப் பேணிக் காப்பார். எல்லா இடங்களிலும் இவை இரண்டும் நமக்குத் தேவை. நாம் நம்முடைய விருப்பப்படி அல்லாமல் கடவுளின் சித்தப்படி வேறொரு நாட்டுக்குப் போக வேண்டியிருந்தால் அது தவிர்க்க முடியாதது என்று எண்ணி வருந்துகிறோம். ஒரு விசுவாசி எல்லா நாடுகளிலும் யாத்திரிகராகவும் வெளியாராகவுமே இருக்கிறார். ஆயினும் கடவுள் தலைமுறை தலைமுறையாகத் தம் அடியாருக்கு இருந்தது போல் விசுவாசிக்கும் எல்லா இடங்களிலும் தங்கும் இடமாக இருக்கிறார். உலகப் பிரகாரமான ஓர் அரசரின் பாதுகாப்பு நமக்கு இல்லாமற் போகலாம். ஆனால் கடவுள் நான் உன்னைப் பாதுகாப்பேன் என்று சொன்னால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இது ஒரு பயணிக்கு ஆசீர்வாதமான பயண இசைவுச் சீட்டும், நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்பவருக்குத் தெய்வீகமான பயணத்துணைவரும் ஆகும்.
யாக்கோபு தன் தகப்பன் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை. தாயின் செல்லப் பிள்ளையாய் இருந்தான். தன் சகோதரனைப்போல் துணிச்சலுள்ள வேட்டை வீரனாய் இருக்கவில்லை. ஆயினும் அயல் நாடு சென்றபோது கடவுள் அவனோடு கூடச் சென்றார். அவனுக்கு மூட்டை முடிச்சு அதிகமில்லை. உடன் செல்கிறவர்களும் யாருமில்லை. ஆயினும் எந்த இளவரசனுக்கும் அவனைப்போல் சிறப்பு வாய்ந்த மெய்க்காவலர்கள் இருந்ததில்லை. அவன் வெளியிடத்தில் படுத்துத் தூங்கினபோதுகூட தேவதூதர் அவனுக்குக் காவலாயிருந்தார்கள். கடவுளும் அவனோடு பேசினார். ஆண்டவர் நம்மைப் போகச் சொல்லிக் கட்டளையிட்டால் நாமும் இயேசு கிறிஸ்து சொன்னது போல் இவ்விடம் விட்டுப் போவோம் வாருங்கள் என்று செல்வோமாக!
Charles H. Spurgeon