“You suffered along with those in prison and joyfully accepted the confiscation of your property, because you knew that you yourselves had better and lasting possessions.” Hebrews 10:34.

This is well. Our substance here is very unsubstantial; there is no substance in it. But God has given us a promise of real estate in the gloryland, and that promise comes to our hearts with such full assurance of its certainty that we know in ourselves that we have an enduring substance there. Yes, “we have” it even now. They say, “A bird in the hand is worth two in the bush,” but we have our bird in the bush and in the hand, too. Heaven is even now our own. We have the title deed of it, we have the earnest of it, we have the firstfruits of it. We have heaven in price, in promise, and in principle; this we know not only by the hearing of the ear but “in ourselves.”

Should not the thought of the better substance on the other side of Jordan reconcile us to present losses? Our spending money we may lose, but our treasure is safe. We have lost the shadows, but the substance remains, for our Savior lives, and the place which He has prepared for us abides. There is a better land, a better substance, a better promise; and all this comes to us by a better covenant; wherefore, let us be in better spirits, and say unto the Lord, “Every day will I bless thee; and praise thy name for ever and ever.”

பரலோகத்தின் மெய்யான சுதந்திரம்

பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலைத்துள்ளதுமான சுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, எபி.10:34.

இது நல்லது. இங்கு நமக்குள்ள சுதந்திரம் பொய்த் தோற்றமுடையது. இதில் சாரம் இல்லை. ஆனால் மகிமை பொருந்திய நாட்டில் நமக்கு மெய்யான சுதந்திரம் இருக்கிறது என்று கடவுள் வாக்குறுதி அளித்துள்ளார். அது உண்மை என்னும் உறுதி நமக்கு இருப்பதால் நிலையுள்ள சுதந்திரம் நமக்கு அங்கு இருக்கிறது என்பதை நிச்சயமாய் நம்புகிறோம். இப்போதே நாம் அதை உள்ளவர்களாய் இருக்கிறோம். புதரிலுள்ள இரண்டு பறவைகளைவிட கையிலுள்ள ஒரு பறவை சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நமக்கோ புதரிலும் கையிலும் பறவைகள் இருக்கின்றன. இப்போதே பரலோகம் நமக்குச் சொந்தமாயிருக்கிறது. அதை நம் உடமையாய் அடைவதற்கான ஆவணமும், அதைப்பற்றிய மெய் உறுதிப்பாடும், அதன் முதற்கனிகளும் நம்மிடம் இருக்கின்றன. விலைகொடுத்து வாங்கினதினாலும், வாக்குறுதியினாலும், உள்ளத்தில் அறிவதினாலும் பரலோகம் நம்முடையதாய் இருக்கிறது. இதை நாம் காதினால் மட்டும் கேட்காமல் நம் மனதிலேயே அறிகிறோம்.

இங்கு நாம் நமக்குள்வற்றை இழந்தாலும் யோர்தானின் அக்கரையில் நமக்கு இருக்கும் சிறப்பான சுதந்தரத்தைப்பற்றிய நிச்சயம் நம் மனதைச் சமாதானம் அடையச் செய்யலாமல்லவா? ஒருவேளை செலவு செய்வதற்கான பணத்தை நாம் இழக்கலாம். ஆனால் நம் அரும்பொருள் பத்திரமாயிருக்கிறது. நம் இரட்சகர் உயிரோடு இருக்கிறார். அவர் நமக்கென்று ஆயத்தம்பண்ணின இடம் நிலைத்திருக்கிறது. ஆகையால் நாம் நிழல்களை இழந்து விட்டாலும் நம் சுதந்திரம் நிலைத்து இருக்கிறது. நமக்காக சிறப்பான நாடும், சிறப்பான வாக்குறுதியும் இருக்கின்றன. சிறப்பான உடன்படிக்கையினால் இவையெல்லாம் நம்முடையவை ஆகின்றன. ஆகையால் நாம் மகிழ்ச்சி உள்ளவர்களாய் ஆண்டவரை நோக்கி, நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன் என்று சொல்வோமாக.

Charles H. Spurgeon