“Then you will go on your way in safety, and your foot will not stumble.” Proverbs 3:23.
That is to say, if we follow the ways of wisdom and holiness we shall be preserved in them. He who travels by daylight along the highway is under some protection. There is a way for every man, namely, his own proper calling in life, and if we devoutly walk therein in the fear of God He will preserve us from evil. We may not travel luxuriously, but we shall walk safely. We may not be able to run like young men, but we shall be able to walk like good men.
Our greatest danger lies in ourselves: our feeble foot is so sadly apt to stumble. Let us ask for more moral strength that our tendency to slip may be overcome. Some stumble because they do not see the stone in the way: divine grace enables us to perceive sin and so to avoid it. Let us plead this promise and trust in Him who upholds His chosen.
Alas! Our worst peril is our own carelessness, but against this the Lord Jesus has put us on our guard, saying, “Watch and pray.”
Oh, for grace to walk this day without a single stumble! It is not enough that we do not actually fall; our cry should be that we may not make the smallest slip with out feet but may at the last adore Him “who is able to keep us from stumbling.”
இடறுதலைத் தவிருங்கள்
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய். உன் கால் இடறாது நீதி. 3:23.
அதாவது நாம் தூய்மையும் விவேகமுமுள்ள வழியில் நடந்தால் நாம் காப்பாற்றப்படுவோம். நெடுஞ்சாலையில் பகல் வேளையில் பயணம் செய்பவருக்கு ஓரளவு பாதுகாப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வழி உண்டு. அதாவது வாழ்க்கையில் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான அழைப்பு, அதில் கடவுள் பயத்தோடும் பற்றோடும் நடந்தால் அவர் நம்மைத் தீமையிலிருந்து பாதுகாப்பார். நாம் எல்லா வசதிகளுடனும் நடக்காவிட்டாலும் பாதுகாப்போடு நடக்கிறவர்களாய் இருப்போம். வாலிபரைப்போல நாம் ஓடமுடியாவிட்டாலும் நல்ல மனிதரைப் போல நடக்கமுடியும்.
நமக்குப் பெரிய ஆபத்து நம்மிலேயே இருக்கிறது. நம்முடைய தளர்ந்த பாதங்கள் தடுக்கி விழக்கூடியவையாய் இருக்கின்றன. இவ்விதம் இடறும் தன்மையை நீக்க இன்னும் அதிகமான நேர்மை உணர்வுக்காக வேண்டிக்கொள்வோமாக. சிலர் வழியில் உள்ள கல்லைப் பார்க்காதபடியால் இடறுகிறார்கள். நாம் பாவத்தை உணர்ந்து, அதற்குத் தப்பிச் செல்வதற்குக் கடவுளின் கிருபை நமக்குத் துணைபுரிகிறது. தாம் தெரிந்துகொண்டவர்களைத் தாங்குபவரை நம்பி, இந்த வாக்குறுதி நம்மில் மெய்யாகுமாறு வேண்டிக்கொள்வோமாக.
ஐயா! நம் கவனம் இன்மையே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய இடர். ஆனால் இதைக் குறித்துக் கவனமாயிருக்க இயேசு கிறிஸ்து விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்.
இந்த நாளில் ஒருமுறைகூட இடறாமல் இருக்க, கிருபை கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நாம் கீழே விழாமல் இருந்தால் மட்டும் போதாது. நம் பாதம் சிறிதளவுகூட இடறாமல் வழுவாதபடி நம்மைக் காப்பவரை இறுதியில் போற்றிப் புகழவேண்டும் என்பதே நம் வேண்டுதலாய் இருக்கவேண்டும்.
Charles H. Spurgeon