“Do not be afraid of sudden terror, Nor of trouble from the wicked when it comes; For the Lord will be your confidence, And will keep your foot from being caught.” Proverbs 3:25-26.

When God is abroad in judgments, He would not have His people alarmed. He has not come forth to harm but to defend the righteous.

He would have them manifest courage. We who enjoy the presence of God ought to display presence of mind. Since the Lord Himself may suddenly come, we ought not to be surprised at anything sudden. Serenity under the rush and roar of unexpected evils is a precious gift of divine love.

The Lord would have His chosen display discrimination so that they may see that the desolation of the wicked is not a real calamity to the universe. Sin alone is evil; the punishment which follows thereupon is as a preserving salt to keep society from putrefying. We should be far more shocked at the sin which deserves hell than at the hell which comes out of sin.

So, too, should the Lord’s people exhibit great quietness of spirit. Satan and his serpent seed are full of all subtlety; but those who walk with God shall not be taken in their deceitful snares. Go on, believer in Jesus, and let the Lord be thy confidence.

மனஞ் சோராமை

சடிதியான திகிலும் துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். நீதி 3:25-26.

கடவுள் சுறு சுறுப்பாக நியாயந்தீர்த்துக்கொண்டிருந்தாலும் அவர் மக்கள் பயப்பட வேண்டியதே இல்லை. ஏனெனில் அவர் தீமை செய்ய வரவில்லை. நீதிமான்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறார்.

அவர்கள் தங்களுக்குள்ள துணிவை வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறார். கடவுளின் பிரசன்னத்தை அனுபவித்தவர்களாகிய நாம் மனஞ் சோராமல் சமயத்திற்கேற்ற மன அமைதி உள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஆண்டவரே தீடீரென்றுதான் வருவார். ஆனபடியால் தீடீரென்று நேரிடும் எதைக் குறித்தும் நாம் திகைக்க வேண்டியதில்லை. எதிர்பாராத தீமைகள் தாக்கும்போது பரபரப்பின்றி இருப்பது தேவனுடைய அன்பினால் நமக்குக் கிடைத்த மதிப்புமிக்க ஈவாகும்.

ஆண்டவர் தெரிந்துகொண்டவர்கள் வேறுபாடு கண்டறிகிறவர்களாக இருந்து, தீயவர்களின் அழிவு பிரபஞ்சத்திற்கு ஏற்படக்கூடிய பெரும் இடர் அல்ல என்று அறிந்துகொள்ள விரும்புகிறார். பாவமே தீமையானது. அதற்குக் கிடைக்கும் தண்டனை சமுதாயம் அழுகிவிடாமல் பேணப்பயன்படும் உப்பைப் போன்றது. பாவத்தினால் வரும் நரகத்தைக் குறித்து அதிர்ச்சியடைவதைவிட நரக தண்டனை பெற ஏதுவாயிருக்கும் பாவத்தைக் குறித்தே அதிகம் அதிர்ச்சியடையவேண்டும்.

அதேபோல ஆண்டவரின் மக்கள் அமைதியான ஆவியை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கவேண்டும். சாத்தானும் அவனுடைய சர்ப்பமாகிய வித்துக்களும் சூழ்ச்சித்திறம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள். அனால் கடவுளோடு நடப்பவர்கள் அவனுடைய வஞ்சக வலையில் விழமாட்டார்கள். இயேசுவை நம்பகிறவரே, நீர் தைரியமாக முன்னேறிச் செல்லும். ஆண்டவர் உம் உறுதியான நம்பிக்கையாய் இருப்பாராக.

Charles H. Spurgeon.