“Because he loves me,” says the Lord, “I will rescue him; I will protect him, for he acknowledges my name.” Psalm 91:14.
Does the Lord say this to me? Yes, if I have known His name. Blessed be the Lord, I am no stranger to Him. I have tried Him, proved Him, and known Him, and therefore do I trust Him. I know His name as a sin-hating God, for by His Spirit’s convincing power I have been taught that He will never wink at evil. But I also know Him as the sin-pardoning God in Christ Jesus, for He has forgiven me all trespasses. His name is faithfulness, and I know it, for He has never forsaken me though my troubles have multiplied upon me.
This knowledge is a gift of grace, and the Lord makes it to be the reason why He grants another grace-gift, namely, setting on high. This is grace upon grace. Observe that if we climb on high, the position may be dangerous; but if the Lord sets us there it is safe. He may raise us to great usefulness, to eminent experience, to success in service, to leadership among workers, to a father’s place among the little ones. If He does not do this, He may set us on high by near fellowship, clear insight, holy triumph, and gracious anticipation of eternal glory. When God sets us on high, Satan himself cannot pull us down. Oh, that this may be our case all through this day!
கடவுளின் உயர்வான இடங்கள்
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். சங்.91:14.
ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொல்லுகிறாரா? ஆம். அவர் நாமத்தை நான் அறிந்திருந்தால் இவ்விதம் சொல்லுகிறார். அவர் மகிமைப்படுவராக. என்னை அவர் அறிந்திருக்கிறார். நான் அவரை அனுபவத்தில் கண்டு அறிந்திருக்கிறேன். ஆகையால் அவரை நம்புகிறேன். அவர் பாவத்தை வெறுக்கும் கடவுள் என்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவர் ஒருபோதும் தீமையைக் கண்டும் காணாததுபோல இருக்கமாட்டார் என்று அவர் ஆவியின் உறுதிப்பாடான வல்லமையின்மூலம் போதிக்கப்பட்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவில் அவர் பாவத்தை மன்னிக்கும் கடவுள் என்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவர் என் பாவங்களையெல்லாம் மன்னித்திருக்கிறார். அவர் நாமம் நம்பத்தகுந்தது. இதை நான் திட்டவட்டமாய் அறிந்திருக்கிறேன். ஏனெனில் என் கஷ்டங்கள் பெருகிவிட்டபோதிலும் அவர் என்னைக் கைவிட்டதில்லை.
இதை அறிவது கிருபையின் பரிசாகும். கிருபையின் வேறொரு பரிசு உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவது ஆகும். கிருபையை அறிந்தால் ஆண்டவர் இதையும் பரிசாக அளிக்கிறார். இதுதான் கிருபையின்மேல் கிருபை. நாமே உயர உயர ஏறிக்கொண்டுபோனால் நம் நிலைமை ஆபத்தானதாகும். ஆனால் அவரே நம்மை உயரத்தில் வைத்தால் இது பத்திரமான இடமாய் இருக்கும். அவர் நம்மை இன்னும் அதிகமாகப் பயன்படுத்துவார். இன்னும் மேலான அனுபவங்களுக்கும், ஊழியத்தில் வெற்றிக்கும், ஊழிக்காரரின் தலைவர் பதவிக்கும், சிறுவருக்குத் தகப்பனாயிருக்கும் நிலைக்கும் உயர்த்துவார். இவ்விதம் செய்யாவிட்டால் தம்மோடு நெருங்கிய தோழமைக்கும், தெளிவான நுண்ணறிவுத் திறனுக்கும், தூய வெற்றிக்கும், நித்திய மகிமையை எதிர்நோக்கும் கிருபைக்கும் உயர்த்துவார். கடவுள் நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும்போது சாத்தான் நம்மை கீழே இழுத்துவிடமுடியாது. இந்த நாள் முழுவதும் நாம் இவ்விதமாக உயர்ந்த அடைக்கலத்தில் இருப்போமாக !
Charles H. Spurgeon