“You have said so,” Jesus replied. “But I say to all of you: From now on you will see the Son of Man sitting at the right hand of the Mighty One and coming on the clouds of heaven.” Matthew 26:64.
Ah, Lord, Thou wast in Thy lowest state when before Thy persecutors Thou wast made to stand like a criminal! Yet the eyes of Thy faith could see beyond Thy present humiliation into Thy future glory. What words are these, “Nevertheless-hereafter!” I would imitate Thy holy foresight, and in the midst of poverty, or sickness, or slander, I also would say, “Nevertheless-hereafter.” Instead of weakness, Thou hast all power; instead of shame, all glory; instead of derision, all worship, Thy cross has not dimmed the splendor of Thy crown, neither has the spittle marred the beauty of Thy face. Say, rather, Thou are the more exalted and honored because of Thy sufferings.
So, Lord, I also would take courage from the “hereafter.” I would forget the present tribulation in the future triumph. Help thou me by directing me into Thy Father’s love and into Thine own patience, so that when I am derided for Thy name I may not be staggered but think more and more of the hereafter, and, therefore, all the less of today. I shall be with Thee soon and behold Thy glory. Wherefore, I am not ashamed but say in my inmost soul, “Nevertheless-hereafter.”
தூய முன்னோக்கு
அன்றியும் , மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 26:64).
உம்மைத் துன்பப்படுத்தினவர்கள் உம்மை ஒரு குற்றவாளியைப்போல் தங்களுக்கு முன் நிற்க வைத்தபோது நீர் உண்மையாகவே மதிப்பற்ற நிலையிருந்தீர். ஆயினும் அப்போது இருந்த தாழ்விலிருந்து நம்பிக்கையின் கண்கள் இனிவரும் உம் மகிமையைக் கண்டன. அன்றியும் இதுமுதல் என்பவை எவ்வளவு பொருள் செறிந்த வார்த்தைகள். வறுமை, நோய் உற்றிருக்கும்போது பிறரால் தூற்றப்படும்போதும், நானும் தூய உள்நோக்கு உள்ளவனாய் அன்றியும், இதுமுதல் என்னும் சொற்களை உபயோகிப்பேன். தளர்ச்சிக்குப் பதில் நீர் ஆற்றல் மிக்கவராய் இருக்கிறீர். அவமானத்துக்குப் பதில் எல்லா மகிமையும் உள்ளவராய் இருக்கிறீர். ஏளனம் செய்யப்பட்டதற்குப் பதில் தொழப்படுகிறவராய் இருக்கிறீர். உம்முடைய கிரீடத்தின் புகழ் ஒளியை உம் சிலுவை மங்கச் செய்யவில்லை. உம் முகத்தின் அழகையும் அவர்கள் துப்பின எச்சில் கெடுக்கவில்லை. சொல்லப்போனால் உம் பாடுகளினாலே நீர் இன்னும் மகிமையும் மேன்மையும் அடைந்திருக்கிறீர்கள்.
ஆகையால் ஆண்டவரே, நானும் இதுமுதல் என்பதிலிருந்து தைரியம் கொள்வேன். எதிர்கால வெற்றியின் நினைப்பில் இக்காலக் கஷ்டங்களை மறந்துவிடுவேன். உம் நாமத்துக்காக என்னை ஏளனம் செய்யும்போது நான் தடுமாற்றம் அடையாமல் இப்போதைய துன்பத்தைப் பற்றிய எண்ணம் அற்று இதுமுதல் என்பதை குறித்து அதிகம் அதிகமாய் எண்ணத்தக்கதாக உம் பிதாவின் அன்புக்கும் உம் பொறுமைக்கும் வழிநடத்தியருளும். நான் சீக்கிரத்தில் உம்மோடிருந்து, உம் மகிமையைக் காண்பேன். ஆகையால் நான் வெட்கப்பட்டுப்போவதில்லை. என் ஆன்மாவுக்குள் அன்றியும் இதுமுதல் என்று சொல்வேன்.
Charles H. Spurgeon