“May my heart be blameless in your statutes, that I may not be put to shame!” Psalm 119:80.
We may regard this inspired prayer as containing within itself the assurance that those who keep close to the Word of God shall never have cause to be ashamed of doing so.
See, the prayer is for soundness of heart. A sound creed is good, a sound judgment concerning it is better, but a sound heart toward the truth is best of all. We must love the truth, feel the truth, and obey the truth, otherwise we are not truly sound in God’s statutes. Are there many in these evil days who are sound? Oh, that the writer and the reader may be two of this sort!
Many will be ashamed in the last great day, when all disputes will be decided. Then they will see the folly of their inventions and be filled with remorse because of their proud infidelity and willful defiance of the Lord; but he who believed what the Lord taught and did what the Lord commanded will stand forth justified in what he did. Then shall the righteous shine forth as the sun. Men much slandered and abused shall find their shame turned into glory in that day.
Let us pray the prayer of our text, and we may be sure that its promise will be fulfilled to us. If the Lord makes us sound, He will keep us safe.
உத்தமமான இருதயம்
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக் கடவது. சங்.119:80.
கடவுளின் பிரமாணங்களைக் கைக்கொள்பவர்கள் அவ்விதம் செய்வதைக் குறித்து ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை என்றும் நம்பிக்கையை எழுப்புதலான இந்த விண்ணப்பம் நன்னுள் அடங்கியுள்ளது என்றும் நாம் கருதலாம்.
உத்தமமான இருதயம் வேண்டுமென்று இந்த ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறோம். நேர்மையான கருத்து அதைவிட நல்லது. ஆனால் உண்மையைக் குறித்த நேர்மையான இதயம் எல்லாவற்றையும் விடமேலானது. உண்மையை நாம் நேசிக்க வேண்டும். உணரவேண்டும். அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டும். இல்லையெனில் நாம் மெய்யாகவே கடவுளின் பிரமாணங்களில் நேர்மையானவர்களாய் இருக்கமாட்டோம். தீமையான இந்தக் காலங்களில் நேர்மையானவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை எழுதுபவரும் வாசிப்பவரும் அப்படிப்பட்டவர்களில் இருவராய் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.
தீர்ப்பு வழங்கப்படும் அந்த மாபெரிய நாளிலே பலர் அவமானம் அடைவார்கள். அப்போது தங்கள் கற்பனை எவ்வளவு முட்டாள் தனமானது என்று உணர்ந்து தாங்கள் பெருமையாக அவநம்பிக்கை கொண்டிருந்ததையும் வேண்டுமென்றே ஆண்டவருக்கு அடங்காமல் இருந்ததையும் குறித்து வருத்தம் அடைகிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் ஆண்டவர் போதித்தவைகளை நம்பி அவர் கட்டளைகுக் கீழ்ப்படிந்தவன் தான் செய்தது சரி என்று திட்டமாய் அறிந்தவனாய் இருப்பான். அப்போது நீதிமான்கள் சூரியனைப்போல் பிரகாசிப்பார்கள். யார் தூற்றப்பட்டவர்களாயும் மற்றவர்களின் வசைமொழிகளினால் தாக்கப்பட்டவர்களாயும் இருந்தார்களோ, அவர்கள் அந்நாளில் தாங்கள் அடைந்த அவமானம் மகிமையாக மாற்றப்பட்டுள்ளதைக் காண்பார்கள்.
மேலே கொடுக்கப்பட்ட வசனத்தை நாம் வேண்டுதல் ஆக்கினால் அதில் உள்ள வாக்குறுதி நமக்காக நிறைவேற்றப்படும் என்று நிச்சயமாய் நம்பலாம். ஆண்டவர் நம்மை நேர்மை உள்ளவர்கள் ஆக்கினால் நம்மைப் பாதுகாக்கவும் செய்வார்.
Charles H. Spurgeon