“The Lord shall sell Sisera into the hand of a woman.” Judges 4:9.
Rather an unusual text, but there may be souls in the world that may have faith enough to grasp it. Barak, the man, though called to the war, had little stomach for the fight unless Deborah would go with him, and so the Lord determined to make it a woman’s war. By this means He rebuked the slackness of the man, gained for Himself the more renown, and cast the more shame upon the enemies of His people.
The Lord can still use feeble instrumentalities. Why not me? He may use persons who are not commonly called to great public engagements. Why not you? The woman who slew the enemy of Israel was no Amazon but a wife who tarried in her tent. She was no orator but a woman who milked the cows and made butter. May not the Lord use any one of us to accomplish His purpose? Somebody may come to the house today, even as Sisera came to Jael’s tent. Be it ours not to slay him, but to save him. Let us receive him with great kindness and then bring forth the blessed truth of salvation by the Lord Jesus, our great Substitute, and press home the command “Believe and live.” Who knoweth but some stout-hearted sinner may be slain by the gospel today!
ஒரு பெண்ணின் போர்
கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரியின் கையில் ஒப்புக்கொடுப்பார் (நியா.4:9).
இது அபூர்வமான ஒரு வசனம். ஆனால் இதைக் கிரகித்துக் கொள்ளத் தேவையான அளவு விசுவாசம் உள்ளவர்கள் உலகில் இருக்கலாம். பராக் போர் செய்ய அழைக்கப்பட்ட போதிலும் தெபராள் கூடச்சென்ற போதுதான் தைரியம் உள்ளவராகப் போருக்குச் சென்றார். ஆகையால் கடவுள் அந்தப் போரை ஒரு பெண்ணின் போராக்கத் திட்டமிட்டார். இத்திட்டத்தினால் அவர் ஒரு மனிதனின் சுறுசுறுப்பற்ற தன்மையைக் கடிந்து கொண்டார். தமக்கு இன்னும் அதிகமான புகழைச் சேர்த்துக் கொண்டார். அவர் மக்களின் எதிரிகளை இன்னும் அவமானமடையச் செய்கிறார்.
இக்காலத்தில் ஆண்டவர் பலவீனமான மக்களைத் தம் கருவிகளாக உபயோகிக்க முடியும். அது ஏன் நானாயிருக்கக் கூடாது? பொதுவாக பொதுப்பணிகள் செய்ய அழைக்கப்படாதவர்களை அவர் உபயோகிப்பார். அவ்விதம் உபயோகிக்கப்படுகிறவன் ஏன் நீயாய் இருக்கக் கூடாது? இஸ்ரவேலரின் பகைவனை வெட்டினவள் ஒரு இராட்சசி அல்ல. ஆனால் தன் கூடாரத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணே ஆவாள். அவள் பெரிய நாவன்மை உள்ளவளும் அல்ல ஆனால் மாடுகளைக் கறந்து வெண்ணெய் கடைந்து எடுத்த ஒரு பெண்ணே ஆவாள். ஆண்டவர் நம்மில் ஒருவரைத் தம் திட்டங்களை நிறைவேற்றப் பயன்படுத்த மாட்டாரா? யாகேலின் கூடாரத்துக்கு சிசெரா வந்தது போல் இன்று நம் வீட்டுக்கு யாராவது ஒருவர் வருவார். அவரை நாம் வெட்டிக் கொல்ல வேண்டியதில்லை. அவரைக் காப்பாற்றலாம் அவரை அன்போடு ஏற்றுக்கொண்டு நம் பெரிய பங்கான ஆண்டவர் இயேசு நமக்குக் கொண்டுவந்திருக்கும் மகிமையான இரட்சிப்பைப் பற்றிய உண்மையைச் சொல்லி விசுவாசித்துப் பிழைத்திருங்கள் என்னும் கட்டளையை வற்புறுத்திக் கூறலாம். துணிந்து பாவம் செய்து வந்த ஒருவர் ஒருவேளை இன்று சுவிசேஷத்தின் நற்செய்தியினால் தாக்கப்பட்டு மனம் மாறலாம்.
Charles H. Spurgeon