“Wait for the Lord; be strong and take heart and wait for the Lord.” Psalm 27:14.
Wait! Wait! Let your waiting be on the Lord! He is worth waiting for. He never disappoints the waiting soul.
While waiting keep up your spirits, Expect a great deliverance, and be ready to praise God for it.
The promise which should cheer you is in the middle of the verse?”He shall strengthen thine heart.” This goes at once to the place where you need help. If the heart be sound, all the rest of the system will work well. The heart wants calming and cheering, and both of these will come if it be strengthened. A forceful heart rests and rejoices and throbs force into the whole man.
No one else can get at that secret urn of life, the heart, so as to pour strength into it. He alone who made it can make it strong. God is full of strength, and, therefore, He can impart it to those who need it. Oh, be brave; for the Lord will impart His strength to you, and you shall be calm in tempest and glad in sorrow.
He who penned these lines can write as David did?”Wait, I say, on the Lord.” I do, indeed, say it. I know by long and deep experience that it is good for me to wait upon the Lord.
வலுவான இதயம்
கர்த்தருக்குக் காத்திரு. அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு. சங்.27:14.
காத்திரு! காத்திரு! கர்த்தருக்கே காத்திரு. அவருக்குக் காத்திருப்பது நன்மை பயக்கும். காத்திருக்கும் ஆன்மாவை அவர் ஒரு நாளும் ஏமாற்றமாட்டார்.
காத்திருக்கும் போது உற்சாகமாயிரு. சிறப்பாக விடுதலை அளிக்கப்படுமென்று எதிர்பார்த்து, அதற்காகக் கர்த்தருக்குத் துதி செலுத்த வேண்டுமென்று ஆயத்தமாயிரு. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாக்குறுதி வசனத்தின் நடுவில் அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் என்று இருக்கிறது. உங்களுக்குத் தேவையான உதவியை இது வாக்குப் பண்ணுகிறது. இருதயம் ஸ்திரமாயிருந்தால் உடலின் மற்றப் பகுதிகளெல்லாம் சரிவர வேலை செய்யும். இருதயத்தை அமைதிப்படுத்தவும் மகிழ்ச்சி அடையச் செய்யவும் வேண்டும். அது ஸ்திரமாயிருந்தால் இவ்விதம் இருக்கும் வலிமை வாய்ந்த இருதயம் அமைதியாயும் உற்சாகமாயும் இருந்து மனிதனுக்கு ஆற்றலை அளிக்கிறது. உயிரின் இரகசியமான இருதயத்தை அடைந்து அதற்கு வலுவூட்ட வேறு யாராலும் முடியாது. அதை உண்டாக்கினவரே அதைப் பலப்படுத்த முடியும். கடவுள் பலமுள்ளவர் ஆகையால் பெலன் தேவையானவர்களை அவரே பெலப்படுத்த இயலும். நீ தைரியம் உள்ளவனாய் இரு. ஏனெனில் கர்த்தர் தம் பெலத்தை உனக்கு அருளுவார். புயல் வீசும்போது நீ அமைதியாயும் துக்கம் நேரிடும் போது மகிழ்ச்சியாயும் இருக்கலாம்.
இந்நூலை எழுதியவர் தாவீதைப்போல கர்த்தருக்குக் காத்திரு என்று நான் சொல்லுகிறேன் என்று எழுதக் கூடும். நான் உண்மையாகவே அவ்விதம் சொல்லுகிறேன். நீண்டதும் ஆழ்ந்ததுமான அனுபவத்தின் மூலம் கர்த்தருக்குக் காத்திருப்பது நல்லது என்று நான் சொல்லக்கூடும்.
Charles H. Spurgeon