“For from the top of the crags I see him, from the hills I behold him; behold, a people dwelling alone, and not counting itself among the nations!” Numbers 23:9.
Who would wish to dwell among the nations and to be numbered with them? Why, even the professing church is such that to follow the Lord fully within its bounds is very difficult. There is such a mingling and mixing that one often sighs for “a lodge in some vast wilderness.”
Certain it is that the Lord would have His people follow a separated path as to the world and come out decidedly and distinctly from it. We are set apart by the divine decree, purchase, and calling, and our inward experience has made us greatly to differ from men of the world; and therefore our place is not in their Vanity Fair, nor in their City of Destruction, but in the narrow way where all true pilgrims must follow their Lord.
This may not only reconcile us to the world’s cold shoulder and sneers but even cause us to accept them with pleasure as being a part of our covenant portion. Our names are not in the same book, we are not of the same seed, we are not bound for the same place, neither are we trusting to the same guide; therefore it is well that we are not of their number. Only let us be found in the number of the redeemed, and we are content to be off and solitary to the end of the chapter.
மீட்கப்பட்டவர்களின் மத்தியில்
அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். எண்.23:9.
ஜாதிகளோடு வாசமாயிருந்து அவர்களில் ஒருவராக எண்ணப்பட யார் விரும்புவார்கள்? உரிமை கொண்டாடும் சபையில்கூட அங்கத்தினனாய் இருந்து ஆண்டவரை முழுவதுமாய்ப் பின்பற்றுவது சிலவேளைகளில் கஷ்டமாய் இருக்கிறது. அந்நிய தேவர்களைப் பின்பற்றுகிறவர்களோடு அவ்வளவு கலந்தும் ஒன்றுபட்டும் இருப்பதால் வனாந்தரத்தில் தனியாக ஒரு இருப்பிடம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஏக்கம் கொள்ளத் தேன்றுகிறது.
தம் ஜனங்கள் உலகத்தின் பாதையிலிருந்து வேறுபட்ட பாதையில் சென்று அதிலிருந்து வேறுபட்டவர்களாய் வாழ வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார் என்பது நிச்சயம். கடவுளின் ஆணையின்படியும் அவரால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டதாலும் நம் அழைப்பினாலும் நாம் பிரித்து எடுக்கப்பட்டவர்கள். நம் மனதின் அனுபவமும் உலகப் பிரகாரமான மக்களிலிருந்து நம்மை முற்றிலும் வேறுபட்டவர்கள் ஆக்கியிருக்கிறது. அப்படியிருக்கும் பொழுது நாம் மாயச் சந்தையிலும் அழிவின் நகரிலும் சுற்றாமல் எல்லா யாத்திரிகர்களும் நம் ஆண்டவரைப் பின்பற்றிச் செல்லும் குறுகலான பாதை வழியே செல்லவேண்டும்.
இது நம்மை உலகத்தினரின் பழிப்பையும் பரிகாசத்தையும் ஏற்றுக்கொள்ள மட்டுமல்லாமல் உடன்படிக்கையில் நம் பங்காக அவற்றை மகிழ்ச்சியோடு சகித்துக் கொள்ளவும் செய்கிறது. நம் பெயர் அவர்களோடு ஒரே புத்தகத்தில் இருப்பதில்லை. நாம் அவர்களைப் போல் ஒரே விதையிலிருந்து வளரவில்லை. நாம் ஒரே இடத்தை நோக்கியும் செல்லவில்லை. நாம் ஒரே வழிகாட்டியையும் நம்பவில்லை. ஆகையால் நாம் அவர்களோடு ஒருவராக இல்லாமல் இருப்பது நல்லது. நாம் தனித்து இருந்தாலும் மீட்கப்பட்டவர்கள் கூட்டத்தில் ஒருவராகக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
Charles H. Spurgeon