So this is what the Sovereign Lord says: “See, I lay a stone in Zion, a tested stone, a precious cornerstone for a sure foundation; the one who relies on it will never be stricken with panic.” Isaiah 28:16.
He shall make haste to keep the Lord’s commandments; but he shall not make haste in any impatient or improper sense.
He shall not haste to run away, for he shall not be overcome with the fear which causes panic. When others are flying hither and thither as if their wits had failed them, the believer shall be quiet, calm, and deliberate, and so shall be able to act wisely in the hour of trial.
He shall not haste in his expectations, craving his good things at once and on the spot, but he will wait God’s time. Some are in a desperate hurry to have the bird in the hand, for they regard the Lord’s promise as a bird in the bush, not likely to be theirs. Believers know how to wait..
He shall not haste by plunging into wrong or questionable action. Unbelief must be doing something, and thus it works its own undoing; but faith makes no more haste than good speed, and thus it is not forced to go back sorrowfully by the way which it followed heedlessly.
How is it with me? Am I believing, and am I therefore keeping to the believer’s pace, which is walking with God? Peace, fluttering spirit! Oh, rest in the Lord, and wait patiently for Him! Heart, see that thou do this at once!
எவ்விதம் காத்திருப்பது என்று அறிந்துகொள்
விசுவாசிக்கிறவன் பதறான். ஏசா.28:26.
ஆண்டவரின் கற்பனைகளைக் கைக்கொள்ள அவன் விரைவான். ஆனால் அவசரப்பட்டு அல்லது தகாத முறையில் பதறமாட்டான்.
அவன் அவசரப்பட்டு ஓடிவிடமாட்டான். ஏனென்றால் திகில் அடையும்படி அவன் பயப்படமாட்டான். தங்கள் மதியை இழந்து விட்டதுபோல் மற்றவர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போது விசுவாசி அமைதியாகவும் அமைதலாகவும் இருந்து யோசிப்பான். ஆகையால் சோதனை வரும்போது ஞானமாய் நடந்து கொள்வான்.
நல்ல காரியங்கள் இப்போதே இந்த இடத்திலேயே கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் அவசரம் காட்டமாட்டான். கடவுளின் காலத்துக்குக் காத்திருப்பான். சிலர் பறவை தங்கள் கைக்கு வந்துவிட வேண்டுமென்று அவசரப்படுகிறார்கள். ஆண்டவரின் வாக்குறுதியை செடியிலிருக்கும் பறவையாகவே மதித்து அது தங்களுக்குக் கிடைக்காது என்று நினைக்கிறார்கள். விசுவாசிகளுக்குக் காத்திருக்கத் தெரியும்.
விசுவாசி அவசரத்திலே தவறான செயலைச் செய்யமாட்டான். நம்பிக்கையின்மை எவ்விதத்திலாவது கிரியை செய்யும். அது தன் அழிவையே தேடிக்கொள்கிறது. ஆனால் விசுவாசம் நல்ல வேகத்திலே பதறாமல் போக ஏவுகிறது. ஆகையால் அவ்விதம் செயல்படுகிறவர்கள் முட்டாள் தனமாகப் பதறி, சென்ற பாதையிலேயே துக்கத்துடன் திரும்புகிறவர்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
நான் எப்படிப்பட்டவனாயிருக்கிறேன். நான் நம்பி ஆண்டவரோடு நடந்துசெல்லும் விசுவாசியின் வேகத்தில் செல்கிறேனா? பதறும் ஆவியே சமாதானமாயிரு. ஆண்டவரில் அமர்ந்து பொறுமையாய்க் காத்திரு. இதயமே உடனே இவ்விதம் இருக்கத் தொடங்கு.
Charles H. Spurgeon