“I have set the Lord always before me: because he is at my right hand, I shall not be moved.” Psalm 16:8.
This is the way to live. With God always before us, we shall have the noblest companionship, the holiest example, the sweetest consolation, and the mightiest influence. This must be a resolute act of the mind. “I have set,” and it must be maintained as a set and settled thing. Always to have an eye to the Lord’s eye and an ear for the Lord’s voice?this is the right state for the godly man. His God is near him, filling the horizon of his vision, leading the way of his life, and furnishing the theme of his meditation. What vanities we should avoid, what sins we should overcome, what virtues we should exhibit, what joys we should experience if we did indeed set the Lord always before us! Why not?
This is the way to be safe. The Lord being ever in our minds, we come to feel safety and certainty because of His being so near. He is at our right hand to guide and aid us; and hence we are not moved by fear, nor force, nor fraud, nor fickleness. When God stands at a man’s right hand, that man is himself sure to stand. Come on, then, ye foemen of the truth! Rush against me like a furious tempest, if ye will. God upholds me. God abides with me. Whom shall I fear?
நம் புனித முன்மாதிரி
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்.16:8.
வாழ்வதற்கு ஏற்ற வழி இதுதான். ஆண்டவர் எப்போதும் நமக்கு முன்னே செல்கிறபடியால் நமக்குப் பெருந்தன்மை உடையவரின் தோழமையும், புனிதமானவரின் முன்மாதிரியும், இனிமைமிக்க ஆறுதலும், ஆற்றல் வாய்ந்த ஆறுதலும் இருக்கும். இது மனதின் தயக்கமற்ற செயலாய் இருக்க வேண்டும். நான் வைத்திருக்கிறேன் என்பது நிலைநாட்டப்பட்டதும் முடிவுசெய்யப்பட்டதுமான செயலாயிருக்க வேண்டும். தெய்வ பயமுள்ளவன் எப்பொழுதும் கடவுள் தன்னைப் பார்க்கிறாரா என்று அறிந்து கொள்ளவும், அவர் சத்தத்தைக் கேட்கவும் விழிப்புள்ளவனாய் இருக்க வேண்டும். அவன் கடவுள் அவன் அருகே இருந்து அவன் பார்வையை நிறைத்திருப்பவராயும் அவனைச் சரியானமுறையில் வழிநடத்துபவராயும் அவன் தியானிக்க வேண்டிய தலைப்புக்களைக் கொடுத்து உதவுபவராயும் இருக்கிறார். ஆண்டவரை நமக்குமுன் வைத்திருந்தால், எப்படிப்பட்ட மாயைகளையெல்லாம் தவிர்ப்போம், எப்படிப்பட்ட பாவங்களை மேற்கொள்வோம், எப்படிப்பட்ட நற்குணங்களை எடுத்துக் காட்டுவோம், எவ்வித மகிழ்ச்சியை அனுபவிப்போம் என்று நினைத்துப் பாருங்கள்………நாம் ஏன் அவ்விதம் செய்யக் கூடாது?
பத்திரமாயிருக்க இதுவே வழியாகும். நாம் எப்போதும் ஆண்டவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால், அவர் அருகிலிருக்கிறார் என்று உணர்ந்து பத்திரமாய் இருப்பதாகவும் உறுதிப்பாடு கொண்டவர்களாயும் இருக்கிறோம். அவர் நம்மை வழிநடத்தவும் நமக்கு உதவி செய்யவும் நம் வலது பாரிசத்தில் இருக்கிறார். ஆகையால் அச்சம் வலிமை மோசடி நிலையற்றவை எவையும் எம்மை அசைக்கமுடியாது. கடவுள் ஒரு மனிதனின் வலது பாரிசத்தில் நின்றால் அவன் திடமாக நிற்கிறவனாய் இருப்பான். ஆகவே எதிரிகளே வேண்டுமானால் கடும் புயல் மாதிரி என்மீது வீசுங்கள். கடவுள் என்னைத் தாங்குவார். என்னோடு நிலைத்திருப்பார். நான் யாருக்குப் பயப்பட வேண்டும்?
Charles H. Spurgeon