“And they shall beat their swords into plowshares, and their spears into pruning-hooks: nation shall not lift up sword against nation, neither shall they learn war any more.” Isaiah 2:4.
Oh, that these happy times were come! At present the nations are heavily armed and are inventing weapons more and more terrible, as if the chief end of man could only be answered by destroying myriads of his fellows. Yet peace will prevail one day; yes, and so prevail that the instruments of destruction shall be beaten into other shapes and used for better purposes.
How will this come about? By trade? By civilization? By arbitration? We do not believe it. Past experience forbids our trusting to means so feeble. Peace will be established only by the reign of the Prince of Peace. He must teach the people by His Spirit, renew their hearts by His grace, and reign over them by His supreme power, and then will they cease to wound and kill. Man is a monster when once his blood is up, and only the Lord Jesus can turn this lion into a lamb. By changing man’s heart, his bloodthirsty passions are removed. Let every reader of this book of promises offer special prayer today to the Lord and Giver of Peace that He would speedily put an end to war and establish concord over the whole world.
உலக ஒப்பந்தம்
அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும், அடிப்பார்கள். ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ஏசா.2:4.
அந்த மகிழ்ச்சியான நாள் வந்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! தன்னைப் போன்ற மக்களைக் கொன்று குவிப்பதனாலேயே மனிதனின் நோக்கம் நிறைவேறும் என்பது போல் இக்காலத்தில் மக்கள் ஏராளமான ஆயுதங்களைச் செய்து சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதுவுமல்லாமல் இன்னும் பயங்கரமான ஆயதங்களைக் கண்டுபிடித்துக் கொண்டுமிருக்கிறார்கள். ஆயினும் ஒருநாள் சமாதானம் நிலைத்திருக்கும். அந்த நாளில் அழிவின் ஆயுதங்கள் வேறு வடிவங்களில் மாற்றி அடிக்கப்படும். அவை வேறு நல்ல செயல்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இவ்விதமான மாறுதல் எப்படி நடைபெறும்? வாணிபத்தினாலா? நாகரீகத்தினாலா? நடுவர் தீர்ப்புக்கு விட்டுவிடுவதனாலா? நாம் அதை நம்புவதில்லை. இவ்வளவு வலுக்குறைந்த வழிவகைகளை நம்பக் கூடாதென்று பழைய அனுபவங்கள் நமக்குக் காட்டுகின்றன. சமாதானப் பிரபுவின் ஆட்சியினால் மட்டுமே சமாதானம் நிலைநிறுத்தப்படும். அவர் தம் ஆவியினால் மக்களுக்குப் போதிக்க வேண்டும். தம் கிருபையினால் அவர்கள் இதயங்களைப் புதுப்பிக்க வேண்டும். அவர் மகத்தான கிருபையினால் அவர்கள் மேல் ஆட்சி புரிய வேண்டும். அப்பொழுது அவர்கள் கொல்லுவதையும் காயப்படுத்துவதையும் நிறுத்துவார்கள். மனிதனின் இரத்தம் கொதித்து எழுப்போது அவன் மிருகமாகி விடுகிறான். ஆண்டவராகிய இயேசுவே சிங்கத்தை ஆட்டுக்குட்டியாக மாற்றமுடியும். மனிதனின் இதயத்தை மாற்றுவதனால் இரத்த தாகமுள்ள அவன் வெறி உணர்ச்சிகள் நீக்கப்படுகின்றன. வாக்குறுதிகள் அடங்கிய இந்த நூலை வாசிப்பவர் ஒவ்வொருவரும் இன்று ஆண்டவரும் சமாதானம் அளிப்பவருமான கடவுளை நோக்கி அவர் யுத்தங்களை ஒழித்து உலகம் முழுவதிலும் சமாதான உடன்பாடு ஏற்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்வார்களாக!
Charles H. Spurgeon