“As birds flying, so will the Lord of hosts defend Jerusalem.” Isaiah 31:5.
With hurrying wing the mother bird hastens up to the protection of her young. She wastes no time upon the road when coming to supply them with food or guard them from danger. Thus as on eagle’s wings will the Lord come for the defense of His chosen; yea, He will ride upon the wings of the wind.
With outspread wing the mother covers her little ones in the nest. She hides them away by interposing her own body. The hen yields her own warmth to her chicks and makes her wings a house, in which they dwell at home. Thus doth Jehovah Himself become the protection of His elect. He Himself is their refuge, their abode, their all.
As birds flying and birds covering (for the word means both), so will the Lord be unto us: and this He will be repeatedly and successfully. We shall be defended and preserved from all evil: the Lord who likens Himself to birds will not be like them in their feebleness, for He is Jehovah of hosts. Let this be our comfort, that almighty love will be swift to succor and sure to cover. The wing of God is more quick and more tender than the wing of a bird, and we will put our trust under its shadow henceforth and forever.
மூடுவார் ஆதரவாக இருப்பார்
பறந்து காக்கிற பட்சிகளைப் போல சேனைகளின் கர்த்தர் எருசலேமின் மேல் ஆதரவாக இருப்பார். ஏசா.31:5.
தன் குஞ்சுகளைப் பாதுகாக்க தாய்ப்பறவை விரைவாகப் பறந்து செல்கிறது. அவைகளுக்கு உணவு எடுத்துக் கொண்டு போகும்போதும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப் போகும்போதும் அது நேரத்தை வீணாக்குவதே இல்லை. அதே விதமாக ஆண்டவரும் தாம் தெரிந்து கொண்டவர்களைப் பாதுகாக்க கழுகுகளின் செட்டைகளின் மேல் பறந்து வருவார். ஆம் அவர் காற்றின் செட்டைகளில் பறந்து வருவார்.
கூட்டில் இருக்கும் குஞ்சுகளைத் தாய்ப்பறவை தன் சிறகுகளை விரித்து மூடிக்காக்கிறது. தன் உடலை இடையில் வைத்து அவைகளை மறைத்துக் காக்கிறது. அதே விதமாக யேகோவாவே தாம் தெரிந்து கொண்டவர் மேல் ஆதரவாக இருப்பார். அவர்கள் அடைக்கலமும் இருப்பிடமும் எல்லாம் அவரே.
பறந்து காக்கும் பட்சிகளைப்போல ஆண்டவர் நமக்கு இருப்பார். இக் கிரியையைத் தொடர்ந்து மறுபடியும் மறுபடியும் வெற்றிகரமாகச் செய்வார். நாம் எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம். தம்மைப் பறவைகளோடு ஒப்பிடும் ஆண்டவர் அவைகளைப் போல வலுக் குறைந்தவராய் இருக்க மாட்டார். ஏனெனில் அவர் சேனைகளின் கர்த்தராகிய யேகோவா சர்வ வல்லவரின் அன்பு உதவிக்கு விரைந்து ஆதரவு அளிக்கும் என்பது நமக்கு ஆறுதலாய் இருக்கட்டும். கர்த்தரின் இறக்கைகள் பறவையின் இறக்கையை விட மென்மையானதும் விரைவானதும் ஆகும். ஆகையால் இன்றிலிருந்து வரப்போகும் காலத்திலெல்லாம் அதன் நிழலை நாம் நம்பியிருப்போமாக!
Charles H. Spurgeon