Because God has said, “Never will I leave you; never will I forsake you.” Hebrews 13:5.
Several times in the Scriptures the Lord hath said this. He has often repeated it to make our assurance doubly sure. Let us never harbor a doubt about it. In itself the promise is specially emphatic. In the Greek it has five negatives, each one definitely shutting out the possibility of the Lord’s ever leaving one of His people so that he can justly feel forsaken of his God. This priceless Scripture does not promise us exemption from trouble, but it does secure us against desertion. We may be called to traverse strange ways, but we shall always have our Lord’s company, assistance, and provision. We need not covet money, for we shall always have our God, and God is better than gold; His favor is better than fortune.
We ought surely to be content with such things as we have, for he who has God has more than all the world besides. What can we have beyond the Infinite? What more can we desire than almighty Goodness.
Come, my heart; if God says He will never leave thee nor forsake thee, be thou much in prayer for grace that thou mayest never leave thy Lord, nor even for a moment forsake His ways.
வரம்பற்ற உறுதி
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபி.13:5.
வேதத்தில் பலமுறை ஆண்டவர் இந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார். இதை உறுதி செய்ய மறுபடியும் மறுபடியும் சொல்லியிருக்கிறார். அதைக்குறித்து நாம் எவ்வித ஐயமும் கொள்ளாதிருப்போமாக! தன்னிலேயே இந்த வாக்குறுதி அழுத்தமானது. கிரேக்க மொழியில் இந்த வார்த்தைக்கு 5 எதிர்மறைச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தம் மக்களில் ஒருவராவது கைவிடப்பட்டவர்களாக உணராதவாறு அவ்வித நிலை ஏற்படக்கூடிய எல்லா நிலைகளும் அகற்றப்பட்டிருக்கின்றன. விலை மதிக்க முடியாத வேதம் நமக்குத் தொல்லைகள் இல்லாமலிருக்கும் என்று உறுதி கூறுவதில்லை. ஆனால் நாம் கைவிடப்படுவதில்லை என்று உறுதி கூறுகிறது. நாம் பழக்கப்படாத பாதைகளில் செல்ல அழைக்கப்படலாம். ஆனால் நமக்கு எப்போதும் ஆண்டவரின் தோழமையும், உதவியும், வழிவகைகளும் இருக்கும். நாம் பணத்தை இச்சிக்க வேண்டியதில்லை. ஏனெனில் நம் கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பார். அவர் தங்கத்தை விட மேலானவர். அவரது நட்பாதரவு செல்வ வளத்தை விடச் சிறந்தது.
நமக்கு இருப்பவைகளில் நாம் திருப்தி அடைய வேண்டும். ஏனெனில் கடவுளைத் தன் பங்காகக் கொண்டவன் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அடைந்தவனாக இருக்கிறான். எல்லையற்ற பரம்பொருளை விட வேறு எது நமக்கு வேண்டும்? சர்வ வல்லவரின் நன்மைகளை விட வேறு எதன் மேல் நமக்கு விருப்பம் இருக்க முடியும்?
என் இதயமே, கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருப்பதால் நீ உன் ஆண்டவரை விட்டு விலகாமலும், ஒரு நிமிடம் கூட அவரைக் கைவிடாமல் இருப்பதற்கான கிருபைக்காகவும் அதிகமாக வேண்டுதல் செய்.
Charles H. Spurgeon