“You guide me with your counsel, and afterward you will take me into glory.” Psalm 73:24.
From day to day and from year to year my faith believes in the wisdom and love of God, and I know that I shall not believe in vain. No good word of His has ever failed, and I am sure that none shall ever fall to the ground.
I put myself into His hand for guidance. I know not the way that I should choose: the Lord shall choose mine inheritance for me. I need counsel and advice; for my duties are intricate, and my condition is involved… The counsel of the infallible God I seek in preference to my own judgment or the advice of friends…
Soon the end will come: a few more years and I must depart out of this world unto the Father. My Lord will be near my bed. He will meet me at heaven’s gate: He will welcome me to the gloryland. I shall not be a stranger in heaven: my own God and Father will receive me to its endless bliss.
Glory be to Him who Will guide me here, And receive me hereafter. Amen.
மோட்சத்தில் புதியவர் அல்ல
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையிலே ஏற்றுக்கொள்ளுவீர். சங்.73:24.
ஒவ்வொருநாளும் ஆண்டு ஆண்டாகவும் நான் ஆண்டவரின் ஞானத்திலும் அன்பிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் வீணாக நம்பிக்கை வைக்கவில்லை என்றும் அறிந்திருக்கிறேன். அவர் கூறிய எந்த நல்ல வார்த்தையும் ஒருநாளும் பொய்யானதில்லை. ஒன்றும் ஓருநாளும் வீணாய்ப் போகாது என்றும் நான் நம்புகிறேன்.
நான் அவர் வழிநடத்தலுக்காக என்னை அவர் கைக்குள் வைக்கிறேன். எந்த வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியாது. என் சுதந்திரத்தை ஆண்டவர் எனக்காகத் தெரிந்து கொள்வார். எனக்கு ஆலோசனையும், புத்திமதியும் தேவை. ஏனெனில் என் கடமைகள் திருக்கு மறுக்கானவையாயும், என் நிலை சிக்கலானதாயும் இருக்கிறது. ஆதிகாலத்தில் பிரதான ஆசாரியார் தம் ஊரீம் தும்மீம்மை நோக்கிப் பார்த்தது போல் நான் ஆண்டவரைத் தேடுகிறேன். என் திறனாய்வுக்கும் நண்பர்கள் ஆலோசனைக்கும் மேலாக தவறா நிலையுடைய கடவுளின் ஆலோசனையை நாடுகிறேன். மகிமையுள்ள யேகோவாவே நீர் என்னை வழிநடத்துவீராக!
சீக்கிரத்தில் முடிவு வரும். இன்னும் சில ஆண்டுகளில் நான் இந்த உலகை விட்டு, பிதாவண்டை செல்வேன். என் ஆண்டவர் என் படுக்கையண்டை இருப்பார். மோட்சத்தின் வாசலில் அவர் என்னைச் சந்திப்பார். மகிமையின் நாட்டிற்குள் அவர் என்னை அழைத்துசு; செல்வார். மோட்சத்தில் நான் அந்நியனாய் இருக்க மாட்டேன். என் சொந்தக் கடவுளும் பிதாவுமானவர் அதன் முடிவில்லா மகிமைக்குள் என்னை ஏற்றுக் கொள்வார்.
இங்கு என்னை வழி நடத்துபவரும், இனிமேல் என்னை ஏற்றுக்கொள்பவரும் ஆனவருக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்.
Charles H. Spurgeon