“And it shall come to pass, when I bring a cloud over the earth, that the beau shall be seen in the cloud.” Genesis 9:14.
Just now clouds are plentiful enough, but we are not afraid that the world will be destroyed by a deluge. We see the rainbow often enough to pre-vent our having any such fears. The covenant which the Lord made with Noah stands fast, and we have no doubts about it. Why, then, should we think that the clouds of’ trouble, which now darken our sky, will end in our destruction? Let us dismiss such groundless and dishonoring fears.
Faith always sees the bow of covenant promise whenever sense sees the cloud of affliction. God has a bow with which He might shoot out His arrows of destruction. But see, it is turned upward! It is a bow without an arrow or a string; it is a bow hung out for show, no longer used for war. It is a bow of many colors, expressing joy and delight, and not a bow blood-red with slaughter or black with anger. Let us be of good courage. Never does God so darken our sky as to leave His covenant without a witness, and even if He did, we would trust Him since He cannot change or lie or in any other way fail to keep His covenant of peace. Until the waters go over the earth again, we shall have no reason for doubting our God.
விசுவாசம் வானவில்லைக் காண்கிறது
நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும் போது, அந்த வில் மேகத்தில் தோன்றும் (ஆதி.9:14).
தற்போது கவலைக்கிடமான பலவிதமான மேகங்கள் காணப்படுகின்றன. ஆனால் உலகம் வெள்ளத்தினால் அழிக்கப்பட்டு விடுமோ என்று நாம் பயப்படுவதில்லை. அவ்விதமான அச்சம் நம்மில் தோன்றாதவாறு வானவில்லைப் பலமுறை பார்க்கிறோம். நோவாவோடு கடவுள் செய்த உடன்படிக்கை நிலைத்திருக்கிறது. அதைக்குறித்து நாம் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. அப்படியிருக்கும்போது வானத்தை இருட்டாக்கும் துன்ப மேகங்கள் அழிவுக்கு இழுத்துச் சென்றுவிடும் என்று நாம் நினைப்பது ஏன்? இப்படிப்பட்ட ஆதாரமற்ற, இகழ்ச்சிக்குரிய அச்சங்களை மனதிலிருந்து அகற்றி விடுவோமாக!
இடருக்கான மேகங்களை ஐம்புலன்கள் காணும்போதெல்லாம் விசுவாசமோ நம்பிக்கையான உடன்படிக்கையின் வாக்குறுதியான வானவில்லைப் பார்க்கிறது. அழிவின் அம்புகளை எய்யக்கூடிய வில் ஒன்று கடவுளிடம் இருக்கிறது. ஆனால் அதை நன்றாய்ப் பாருங்கள். அது மேல்நோக்கியிருக்கிறது அது அம்பும் நாணும் இல்லாத வில் அது பார்வைக்காக மட்டுமே தொங்கவிடப்பட்டிருக்கும் வில்லாகும். அது இனி ஒருபோதும் அழிவுக்காக உபயோகிக்கப்பட மாட்டாது. அது படுகொலைக்காக இரத்தச் சிவப்பான வில்லும் அல்ல. சினத்திற்கான கருமையான வில்லும் அல்ல மகிழ்ச்சியையும் களிப்பையும் வெளிப்படுத்தும் பலவண்ண வில்லாகும் ஆகையால் நாம் தைரியம் கொள்வோமாக. அவர் செய்த உடன்படிக்கைக்கு எதிர்மாறாக கடவுள் ஒருநாளும் நம் வானத்தை இருண்டதாக்க மாட்டார். அவர் அப்படிச் செய்தாலும் நாம் அவரை நம்பலாம். ஏனெனில் அவர் மாறக்கூடியவரல்ல, பொய்சொல்லுகிறவருமல்ல, அவருடைய சமாதானத்தின் உடன்படிக்கையை நிலைபெறச் செய்யத் தவறுவதுமில்லை. பூமியின்மேல் ஜலப்பிரளயம் மறுபடியும் ஏற்படும்வரை நாம் கடவுளைச் சந்தேகிப்பதற்கு ஏதுவில்லை.
Charles H. Spurgeon