“But for you who fear my name, the sun of righteousness shall rise with healing in its wings. You shall go out leaping like calves from the stall.” Malachi 4:2.

Yes, when the sun shines, the sick quit their chambers and walk abroad to breathe the fresh air. When the sun brings spring and summer, the cattle quit their stalls and seek pasture on the higher Alps. Even thus, when we have conscious fellowship with our Lord, we leave the stall of despondency and walk abroad in the fields of holy confidence. We ascend to the mountains of joy and feed on sweet pasturage which grows nearer heaven than the provender of carnal men.

To “go forth” and to “grow up” is a double promise. O my soul, be thou eager to enjoy both blessings! Why shouldst thou be a prisoner? Arise, and walk at liberty. Jesus saith that His sheep shall go in and out and find pasture; go forth, then, and feed in the rich meadows of boundless love.

Why remain a babe in grace? Grow up. Young calves grow fast, especially if they are stall fed; and thou hast the choice care of thy Redeemer. Grow, then, in grace and in knowledge of thy Lord and Savior, Be neither straitened nor stunted. The Sun of Righteousness has risen upon thee Answer to His beams as the buds to the natural sun. Open thine heart; expand and grow up into Him in all things.

வளருங்கள்

நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள் (மல்.4:2).

ஆம், சூரியன் பிரகாசிக்கும் போது நோயுள்ளவர்கள் படுக்கைகளை விட்டெழுந்து, சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக வெளியே நடமாடுகிறார்கள். இளவேனிற் காலம் வந்தவுடன் ஆடுமாடுகள் தங்கள் தொழுவங்களை விட்டு மேய்ச்சலுக்காக புல்லுள்ள இடங்களை நோக்கிச் செல்லுகின்றன. அதேபோல் நமக்கும் நம் ஆண்டவரோடு நெஞ்செறிந்த கூட்டுறவு இருந்தால் நாம் மனத்தளர்ச்சியால் அடைபட்டிருக்கும் நிலையை விட்டு உறுதியான நம்பிக்கையோடு நடமாடத் தொடங்குகிறோம். நாம் மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைந்து இம்மை வாழ்வுக்கானவைகளில் நாட்டம் கொள்ளாமல் மோட்சவாழ்வுக்கானவைகளை நாடிச் செல்கிறோம்.

நீங்கள் புறப்பட்டுப் போவீர்கள், வளருவீர்கள் என்பன இரண்டு வாக்குறுதிகளாகும். என் ஆன்மாவே, நீ இவை இரண்டையும் அனுபவிக்க ஆவலாயிரு. நீ ஏன் அடைபட்டுக் கிடக்க வேண்டும்? எழுந்து விடுதலை பெற்றவனாக நடமாடு. தம்முடைய ஆடுகள் உள்ளும் புறம்பும் சென்று, மேச்சலைக் கண்டடையும் என்று இயேசு கூறியுள்ளார். நீங்களும் போய் அளவில்லாத அவர் அன்பின் நிறைவை அனுபவியுங்கள்.

கிருபையில் இன்னும் ஏன் குழந்தையாகவே இருக்கிறீர்கள்? வளருங்கள். தொழுவத்தில் பராமரிக்கப்பட்டால் கன்றுக்குட்டிகள் விரைவில் வளருகின்றன. உங்களுக்கு உங்கள் இரட்சகரின் பராமரிப்பு உண்டு. ஆகவே கிருபையிலும் உங்கள் ஆண்டவரையும் இரட்சகரையும் பற்றிய அறிவிலும் வளருங்கள். ஒடுக்கப்பட்டவர்களாயும் வளர்ச்சி தடைப்பட்டவர்களாயும் இராதேயுங்கள். நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்துள்ளார். மொட்டுக்கள் சூரியனைக் கண்டு மலர்வது போல் நீங்களும் அவர் கிரணங்கள் பட்டதும் மலருங்கள். உங்கள் இருதயத்தைத் திறந்து, விரிவாக்கி அவரில் எல்லாவற்றிலும் வளருகிறவர்களாய் இருங்கள்.

Charles H. Spurgeon