“If you remain in me and my words remain in you, ask whatever you wish, and it will be done for you.” John 15:7.
Note well that we must hear Jesus speak if we expect Him to hear us speak. If we have no ear for Christ, He will have no ear for us. In proportion as we hear we shall be heard.
Moreover, what is heard must remain, must live in us, and must abide in our character as a force and a power. We must receive the truths which Jesus taught, the precepts which He issued, and the movements of His Spirit within us; or we shall have no power at the Mercy Seat.
Suppose our Lord’s words to be received and to abide in us, what a boundless field of privilege is opened up to us! We are to have our will in prayer, because we have already surrendered our will to the Lord’s command. Thus are Elijahs trained to handle the keys of heaven and lock or loose the clouds. One such man is worth a thousand common Christians. Do we humbly desire to be intercessors for the church and the world, and like Luther to be able to have what we will of the Lord? Then we must bow our ear to the voice of the Well-beloved, treasure up His words, and carefully obey them. He has need to “hearken diligently” who would pray effectually.
உங்கள் வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் செவிகொடுங்கள்
நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் (யோ.15:7).
நாம் சொல்வதை இயேசு கேட்கவேண்டுமென்று விரும்பினால் அவர் சொல்வதை நாம் முதலாவது கேட்கவேண்டுமென்பதை அறிந்துகொள்ளுங்கள். நாம் கிறிஸ்துவுக்குச் செவிகொடுக்கவில்லையானால் அவர் நமக்குச் செவிகொடுக்கமாட்டார். நாம் கேட்கும் அளவுக்கு ஏற்றவாறு நாம் கேட்கப்படுவோம்.
அதுமட்டுமல்லாமல், நாம் கேட்பது நம்மில் நிலையாகத் தங்கியிருந்து, நம் பண்பின் ஒரு வேகமாகவும் ஆற்றலாகவும் நிலைத்திருக்கவேண்டும். இயேசு போதித்த உண்மைகளையும், அவர் வெளிப்படுத்திய நல்லொழுக்கப் போதனைகளையும் அவர் ஆவியின் உள்ளத் தூண்டுதலையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்யாவிடில் கிருபாசனத்தண்டையில் நமக்கு எந்தவித உரிமையும் இருக்காது.
நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவை நம்மில் நிலைபெற்றிருக்கச் செய்தால், நமக்கு எவ்விதம் எல்லையற்ற சலுகைகள் வெளியிடப்படும் என்பதை நினைத்துப் பாருங்கள். நாம் ஏற்கெனவே நம்முடைய சித்தத்தை ஆண்டவரின் ஆணைக்கு ஒப்புக்கொடுத்துவிட்டபடியால் நாம் ஆண்டவர் சித்தப்படி வேண்டிக்கொள்வதைப் பெற்றுக்கொள்வோம். இவ்விதம் பரலோகத்தின் திறவுகோல்களைப் பயன்படுத்தவும், மேகங்களை அனுப்பவும் அல்லது தடை செய்யும் எலியாக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் பொதுப்படையான ஆயிரம் கிறிஸ்தவர்களைவிட மேன்மையானவர். சபைகளுக்காகவும், உலகுக்காகவும் நாம் வேண்டுதல் செய்கிறவர்களாயும் லூத்தரைப்போல் நமக்கு வேண்டியதை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருக்க தாழ்மையோடு விரும்புகிறோமா? அப்படியானால் பிரியமானவரின் சத்தத்தைக் கேட்டு, அவர் சொல்வதை நம் மனதில் வைத்துப் போற்றி, அதற்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். பயனுள்ளதாய் வேண்டுதல் செய்யவிரும்புகிறவன் கடவுளுடைய சத்தத்தைக் கவனமாய்க் கேட்கவேண்டும்.
Charles H. Spurgeon