“But when you give to the needy, do not let your left hand know what your right hand is doing, 4 so that your giving may be in secret. Then your Father, who sees what is done in secret, will reward you.” Matthew 6:3-4.
No promise is made to those who give to the poor to be seen of men. They have their reward at once and cannot expect to be paid twice.
Let us hide away our charity?yes, hide it even from ourselves. Give so often and so much as a matter of course that you no more take note that you have helped the poor than that you have eaten your regular meals. Do your alms without even whispering to yourself, How generous I am! Do not thus attempt to reward yourself. Leave the matter with God, who never fails to see, to record, and to reward. Blessed is the man who is busy in secret with his kindness: he finds a special joy in his unknown benevolences. This is the bread, which eaten by stealth, is sweeter than the banquets of kings. How can I indulge myself today with this delightful luxury? Let me have a real feast of tenderness and Row of soul.
Here and hereafter the Lord Himself will personally see to the rewarding of the secret giver of alms. This will be in His own way and time; and He will choose the very best. How much this promise means it will need eternity to reveal.
இரகசியமாகத் தருமம் செய்தல்
நீயோ தர்மஞ் செய்யும்போது, உன் தர்மம் அந்தரமங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரக்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்.6:3-4).
மனிதர் காணும்படியாக ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் பலனை உடனே அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் இரண்டுமுறை பலனை எதிர்பார்க்கமுடியாது. நாம் அந்தரங்கமாகத் தருமம் செய்வோமாக. நமக்குங்கூட அது அந்தரங்கமாய் இருப்பதாக. நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடுவதை எவ்விதம் கணக்கு வைக்காமல் இருக்கிறீர்களோ அவ்விதம் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் கணக்கு வைக்காமல் இருக்குமாறு இயல்பான முறையில் அடிக்கடி ஏராளமாகத் தருமம் செய்யுங்கள். நான் எவ்வளவு உதாரகுணமுள்ளவனாய் இருக்கிறேன் என்று நீங்களே கூறிக்கொள்ளாமல் தருமம் செய்யுங்கள். அவ்விதம் கூறினால் உங்களுக்கே பலன் அளித்துக்கொள்ளுகிறீர்கள். பலன் அளிப்பதைக் கடவுளுக்கே விட்டுவிடுங்கள். அவர் எல்லாவற்றையும் பார்க்கவும், கணக்கு வைக்கவும், பலனளிக்கவும் தவறுவதில்லை. தன் இரக்க குணத்தினால் இரகசியமாக சுறு சுறுப்பாய் இருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். யாரும் அறியாமல் செய்யும் அன்புச் செயல்களினால் அவன் சிறப்பான மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுகிறான். இது இரகசியமாக உண்ணப்படும் ரொட்டியைப்போன்றது. இது அரசர்களின் பெருவிருந்தைவிட ருசிமிக்கது. இன்று இவ்வித இன்பப் பெருவாழ்வில் நான் எவ்விதம் ஈடுபடலாம்? ஆன்மா இளகி, இரக்கம் காட்டி நான் விருந்தில் ஈடுபடுவேன்.
இரகசியமாகத் தருமம் செய்கிறவனுக்கு இப்போதும் இதற்குப் பின்னும் ஆண்டவரே பலனளிப்பார். இது அவர் குறித்த காலத்தில் குறித்த விதமாய் இருக்கும். இந்த வாக்குறுதி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நித்திய வாழ்விலேயே அனுபவிப்போம்.
Charles H. Spurgeon