“The Lord will make you the head, not the tail.” Deuteronomy 28:13.

If we obey the Lord, He will compel our adversaries to see that His blessing rests upon us. Though this be a promise of the law, yet it stands good to the people of God; for Jesus has removed the curse, but He has established the blessing.

It is for saints to lead the way among men by holy influence: they are not to be the tail, to be dragged hither and thither by others. We must not yield to the spirit of the age, but compel the age to do homage to Christ. If the Lord be with us, we shalt not crave toleration for religion, but we shall seek to seat it on the throne of society. Has not the Lord Jesus made His people priests” Surely they are to teach and must not be learners from the philosophies of unbelievers. Are we not in Christ made kings to reign upon the earth? How, then can we be the servants of custom, the slaves of human opinion?

Have you, dear friend, taken up your true position for Jesus? Too many are silent because diffident, if not cowardly. Should we allow the name of the Lord Jesus to be kept in the background? Should our religion drag along as a tail? Should it not rather lead the way and be the ruling force with ourselves and others?

நல்வழி காட்டுதல்

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் (உபா.26:14).

நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்தால் அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நம் எதிரிகள் காணச் செய்வார். இது நியாயப்பிரமாணத்தின் வாக்குறுதியானாலும் இது கடவுளின் மக்களுக்கும் உரியதாகும். ஏனெனில் இயேசு சாபத்தை நீக்கி, ஆசீர்வாதங்களை நிலைநிறுத்தியிருக்கிறார்.

தூய செல்வாக்கினால் மக்களுக்கு நல்வழி காட்டுவது பரிசுத்தவான்களின் கடமையாகும். அவர்கள் அங்கேயும் இங்கேயும் இழுத்துச்செல்லப்பட்ட வால்ப்பாகமல்ல. இக் காலத் தூண்டுதல்களுக்கு நாம் இடங்கொடுக்காமல் இக்காலத்தவர்கள் கிறிஸ்துவை வணங்கத் தூண்டவேண்டும். ஆண்டவர் நம்மோடு இருந்தால் நாம் சமய சுதந்தரத்துக்கு ஏங்குகிறவர்களாய் இருக்கமாட்டோம். ஆனால் மக்கள் யாவரும் அவரை வணங்குகிறவர்கள் ஆக முயற்சி செய்வோம். ஆண்டவராகிய இயேசு தம் மக்களை ஆசாரியர்கள் ஆக்கியிருக்கிறார் அல்லவா? ஆகையால் நாம் போதகர்களாய் இருக்கவேண்டுமே அல்லாமல் அவிசுவாசிகளின் தத்துவங்களிலிருந்து கற்பவர்களாய் இருக்கக்கூடாது. கிறிஸ்துவில் நாம் உலகை ஆள்கிறவர்கள் ஆக்கப்படவில்லையா? அப்படியிருக்க நாம் மக்களின் கருத்துக்களுக்கு அடிமைகளாயும் பாரம்பரியங்களின் ஊழியக்காரராயும் இருப்பது ஏன்?

அன்பான நண்பனே, நீ உண்மையாகவே இயேசுவின் பக்கம் இருக்கிறாயா? பலர் கோழைகளாய் அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாய் இருப்பதால் மௌனம் சாதிக்கிறார்கள். ஆண்டவர் இயேசுவின் நாமம், முதல் இடம் பெறாமல் இருக்க நாம் இடம் கொடுக்கலாமா? நம் சமயம் வால்போல் தயங்கித் தயங்கி ஒன்றன்பின்னாலே போய்க்கொண்டிருக்கலாமா? அது வழிகாட்டியாய் நம்மையும் மற்றவர்களையும் தூண்டும் ஆற்றலாய் இருக்கவேண்டுமல்லா?

Charles H. Spurgeon