“I have told you these things, so that in me you may have peace. In this world you will have trouble. But take heart! I have overcome the world.” John 16:33.
My Lord’s words are true as to the tribulation. I have my share of it beyond all doubt. The flail is not hung up out of the way, nor can I hope that it will be laid aside so long as I lie upon the threshing floor, How can I look to be at home in the enemy’s country, joyful while in exile, or comfortable in a wilderness? This is not my rest. This is the place of the furnace, and the forge, and the hammer. My experience tallies with my Lord’s words.
I note how He bids me “be of good cheer.” Alas! I am far too apt to be downcast. My spirit soon sinks when I am sorely tried. But I must not give way to this feeling. When my Lord bids me cheer up I must not dare to be cast down.
What is the argument which He uses to encourage me? Why, it is His own victory. He says, “I have overcome the world.” His battle was much more severe than mine. I have not yet resisted unto blood. Why do I despair of overcoming? See, my soul, the enemy has been once overcome. I fight with a beaten foe. O world, Jesus has already vanquished thee; and in me, by His grace, He will overcome thee again. Therefore am I of good cheer and sing unto my conquering Lord.
திடன் கொள்ளுங்கள்
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். யோ.16:33.
உபத்திரவங்களைக் குறித்த நம் ஆண்டவரின் சொற்கள் உண்மையானவை. சந்தேகமில்லாமல் அவற்றில் என் பங்கை அனுபவிக்கிறேன். சூடடிக்கும் கோல் அகற்றப்படவில்லை. போரடிக்கும் களத்தில் நான் படுத்திருக்கும்வரை அது அங்கிருந்து எடுக்கப்பட்டு விடும் என்றும் நான் நம்பிக்கை கொள்ள முடியாது. பகைவரின் நாட்டில் இருக்கும்போது நான் எப்படி சொந்த நாட்டில் இருப்பது போல் இருக்கமுடியும்? நாடு கடத்தப்பட்டிருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்? வனாந்தரத்தில் எப்படி வசதிகளுடன் வாழமுடியும்? இது என் இளைப்பாறுதல் அல்ல. இது உலைக்களமும் கொல்லுலையும் சம்மட்டியும் உள்ள இடமாகும். என் ஆண்டவரின் வார்த்தைகளோடு என் அனுபவம் பொருந்துகிறது.
அவர் திடன் கொள் என்று எனக்குக் கட்டளையிடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் ஐயோ நான் வாட்டம் அடைகிறவனாகவே இருக்கிறேன். நான் அதிகமாக சோதிக்கப்படும் போது சீக்கிரத்தில் என் ஆன்மா எளிதில் தளர்ச்சியடைகிறது. ஆனால் இவ்விதம் நேரிட நான் விடக்கூடாது. ஆண்டவர் என்னைத் திடன்கொள்ளச் சொல்லும் போது நான் வாட்டமுறக் கூடாது.
நான் ஊக்கமடைய அவர் எவ்விதம் வாதம் செய்கிறார்? அவரே வெற்றி பெற்றிருக்கிறாரே அவர் நான் உலகத்தை ஜெயித்தேன் என்கிறார். அவர் போர் என்னுடையதை விடக் கடுமையாய் இருந்தது. நான் இன்னும் இரத்தம் சிந்தும்வரை எதிர்த்து நிற்கவில்லையே. மேற்கொள்வதைக் குறித்து நான் அவநம்பிக்கைக்கொண்டு தளர்ச்சி அடைவது ஏன்? என் ஆன்மாவே பகைவன் ஒருமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறான். என்பதைக் கவனி. முறியடிக்கப்பட்ட எதிரியோடு நான் போர் செய்கிறேன். உலகமே இயேசு உன்னை ஏற்கனவே வென்று அடக்கிவிட்டார். அவர் கிருபையின் மூலமாய் என்னிலும் மறுபடியும் உன்னை மேற்கொள்வார். ஆகையால் நான் திடன்கொண்டு வெற்றி வேந்தரான என் ஆண்டவரைப் பாடுவேன்.
Charles H. Spurgeon