“If those days had not been cut short, no one would survive, but for the sake of the elect those days will be shortened.” Matthew 24:22.

For the sake of His elect the Lord withholds many judgments and shortens others. In great tribulations the fire would devour all were it not that Out of regard to His elect the Lord damps the flame. Thus, while He saves His elect for the sake of Jesus, He also preserves the race for the sake of His chosen.

What an honor is thus put upon saints! How diligently they ought to use their influence with their Lord! He will hear their prayers for sinners and bless their efforts for their salvation. He blesses believers that they may be a blessing to those who are in unbelief. Many a sinner lives because of the prayers of a mother, or wife, or daughter to whom the Lord has respect.

Have we used aright the singular power with which the Lord entrusts us? Do we pray for our country, for other lands, and for the age? Do we, in times of war, famine, pestilence, stand out as intercessors, pleading that the days may be shortened? Do we lament before God the outbursts of infidelity, error, and licentiousness? Do we beseech our Lord Jesus to shorten the reign of sin by hastening His own glorious appearing? Let us get to our knees and never rest till Christ appeareth.

நமக்காக

தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். மத்.24:22.

தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக ஆண்டவர் பல தீர்ப்புகளைச் செயல்படுத்தாமல் இருக்கிறார். சில தண்டனைகளைக் குறைக்கிறார். பெரிய இன்னல்களில் ஆண்டவர் தாம் தெரிந்து கொண்டவர்களைக் குறித்த அக்கறையினால் நெருப்பைத் தணிக்காமல் இருந்திருந்தால், அது எல்லாவற்றையும் எரித்து விட்டிருக்கும். இவ்விதமாக இயேசுவுக்காக அவர் தெரிந்து கொண்டவர்களை இரட்சிப்பது மட்டுமல்லாமல், அவர் தெரிந்து கொண்டவர்களுக்காக அவர்கள் வம்சம் அழியாது பாதுகாக்கிறார்.

பரிசுத்தவான்கள் எவ்வளவாக மதிக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் எவ்வளவு ஊக்கத்தோடு தங்கள் ஆண்டவரோடு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்றும் பாருங்கள். பாவிகளுக்காக அவர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தை அவர் கேட்டு அவர்கள் இரட்சிப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விசுவாசமாய் இருக்கும்படி விசுவாசிகளை அவர் ஆசீர்வதிக்கிறார். ஆண்டவர் உயர்வாக மதிக்கும் தாய், மனைவி, மகள் போன்றவர்களின் வேண்டுதலினாலேயே பல பாவிகள் வாழ்கின்றார்கள்.

ஆண்டவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் ஒப்பிணைவற்ற ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறோமா? நாம் இக்காலத்திற்காகவும் நம் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளுக்காகவும் ஜெபிக்கிறோமா? போர், பஞ்சம், கொள்ளை நோய், ஏற்படும்போது அவை பல நாட்கள் நீடிக்காமல் இருக்க கடவுளிடம் கெஞ்சி மன்றாடுகிறோமா? திடீரென்று கடவுள்மேல் நம்பிக்கையின்மையும் குற்றங்களும் சிற்றின்பப்பற்றுகளும் வெளிப்படும்போது கடவுளிடம் புலம்புகிறோமா? பாவத்தின் ஆட்சிக்கு முடிவுகட்ட தம் மகிமையான வருகையைத் துரிதமாக்க ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடி கெஞ்சுகிறோமா? நாம் முழங்காலில் நின்று ஜெபித்து கிறிஸ்து காணப்படும் வரை இளைப்பாறாமல் இருப்போமாக!

Charles H. Spurgeon