“No good thing will he withhold from them that walk uprightly.” Psalm 84:11.
Many pleasing things the Lord may withhold but “no good thing.” He is the best judge of what is good for us. Some things are assuredly good, and these we may have for the asking through Jesus Christ our Lord.
Holiness is a good thing, and this He will work in us freely. Victory over evil tendencies, strong tempers, and evil habits He will gladly grant, and we ought not to remain without it.
Full assurance He will bestow, and near communion with Himself, and access into all truth, and boldness with prevalence at the mercy seat. If we have not these, it is from want of faith to receive and not from any unwillingness of God to give. A calm, a heavenly frame, great patience, and fervent love?all these will He give to holy diligence.
But note well that we must “walk uprightly.” There must be no cross purposes and crooked dealings; no hypocrisy nor deceit. If we walk foully God cannot give us favors, for that would be a premium upon sin. The way of uprightness is the way of heavenly wealth-wealth so large as to include every good thing.
What a promise to plead in prayer! Let us get to our knees.
பரலோக செல்வம்
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சங்.84:11.
மகிழ்வூட்டுகிறவை பலவற்றை ஆண்டவர் வழங்காதிருக்கலாம். ஆனால் நன்மையை வழங்காதிரார். நமக்கு எது நன்மையானது என்பதைத் தீர்மானிக்க அவரே தகுந்தவர். சில உறுதியாக நன்மையானவை. இவற்றை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்டாலே பெற்றுக்கொள்வோம்.
தூய்மை நன்மையானது. அதை இலவசமாக நம்மில் நிறைவேற்றுவார். தீயமனப்பாங்குகள், எரிச்சலான மனநிலை, தீயபழக்கங்கள் முதலியவற்றின்மேல் வெற்றி அருளிச்செய்வார்.
பூரண நம்பிக்கையையும், அவர் அருகிலிருக்கும் தோழமையையும், எல்லா உண்மையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், கிருபாசனத்தண்டை நெருங்கக்கூடிய வாய்ப்பையும் அருளுவார். இவை நமக்கு இல்லாவிடில் கடவுள் அவற்றை நமக்கு அளிக்கத் தயங்குகிறார் என்பதில்லை. நாம் அவற்றை அடைந்து கொள்வோம் என்னும் நம்பிக்கை அற்றவர்களாய் இருப்பதே ஆகும். சீரிய ஒழுக்கத்தில் தளரா ஊக்கம் உள்ளவர்களுக்கு அமைதியையும் பரலோகத்திற்கான மனநிலையையும் அதிகமான பொறுமையையும் தணியா அன்பையும் அருளுவார்.
ஆனால் நாம் உத்தமமாய் நடக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்மில் எந்த முரண்பட்ட நடத்தையும் கோணலான செயல் தொடர்பும் காணப்படக் கூடாது. நாம் வெறுப்புண்டாக்கும் முறையில் நடந்தால் கடவுள் நமக்குக் கருணை காட்டமுடியாது. ஏனெனில் அது பாவத்துக்கு ஊக்கப்பரிசு கொடுப்பது போல் ஆகிவிடும். உத்தமமாய் நடப்பதன்மூலம் பரலோக செல்வங்களைப் பெறலாம். அவை நன்மையானவையின் தொகுப்பாகும்.
இது ஜெபத்தில் எடுத்துச் சொல்லி மன்றாடக்கூடிய எவ்வளவு சிறந்த வாய்ப்பாகும் என்று பாருங்கள். நாம் இப்பொழுதே முழுங்காற்படியிட்டு ஜெபிப்போமாக!
Charles H. Spurgeon