The Lord replied, “My Presence will go with you, and I will give you rest.” Exodus 33:14.
Precious promise! Lord, enable me to appropriate it as all my own.
We must go at certain times from our abode, for here we have no continuing city. It often happens that when we feel most at home in a place, we are suddenly called away from it. Here is the antidote for this ill. The Lord Himself will keep us company. His presence, which includes His favor, His fellowship, His care, and His power, shall be ever with us in every one of our marchings. This means far more than it says; for, in fact, it means all things. If we have God present with us, we have possession of heaven and earth. Go with me, Lord, and then command me where Thou wilt!
But we hope to find a place of rest. The text promises it. We are to have rest of God’s own giving, making, and preserving. His presence will cause us to rest even when we are on the march, yea, even in the midst of battle. Rest! Thrice blessed word. Can it ever be enjoyed by mortals? Yes, there is the promise, and by faith we plead it. Rest comes from the Comforter, from the Prince of Peace, and from the glorious Father who rested on the seventh day from all His works. To be with God is to rest in the most emphatic sense.
உன்போக்கிலெல்லாம் இளைப்பாறுதல்
அவர்: என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். யாத்.33:14.
சிறப்பான வாக்குறுதி! ஆண்டவரே இதை எனக்கு உரியதாக்கிக் கொள்ள எனக்கு உதவி செய்யும்.
இந்த நம்முடைய இருப்பிடத்தை விட்டு நாம் என்றாவது ஒரு நாள் போய்விடவேண்டும். ஏனெனில் இது நமக்கு நிலையான இடமல்ல. பலமுறை நாம் ஒரு இடத்தில் வசதியான வாழ்க்கை வாழும்போது திடீரென்று அங்கிருந்து வேறோர் இடத்திற்குச் செல்ல வேண்டியதாகி விடுகின்றது. இந்த நிலைக்கு ஓர் மாற்று இருக்கின்றது. ஆண்டவரே நம்மோடு இருப்பார். அவர் சுமூகத்தோடு அவர் தயவு, அவர் தோழமை, அவர் அக்கறை, அவர் ஆற்றல் எல்லாம் நாம் பயணம் செய்யும் போது நமக்குக் கிடைக்கும். இதில் கூறப்பட்டுள்ளதை விட அதிகமாய்க் கிடைக்கும். ஏனெனில் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. தேவன் நம்மோடு இருந்தால் உலகமும் பரலோகமும் நம் கைவசம் இருக்கின்றன. ஆண்டவரே, என்னோடு வாரும்! பின் நான் எங்கு போகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடும்.
இளைப்பாறுவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிப்போம் என்று நாம் நம்புகிறோம். தேவனே கொடுக்கும் இளைப்பாறுதலை நாம் பெறுவோம். நாம் பயணம் செய்யும் போதும் போர்புரிந்து கொண்டிருக்கும் போதும் அவர் சமூகம் நம்மை இளைப்பாறச் செய்யும். இளைப்பாறுதல் என்பது மும்மடங்கு மகிமை அளிக்கக் கூடிய சொல். மக்களால் அவ்வித இளைப்பாறுதலை எப்போதாவது அடைய முடியுமா? ஆம் அந்த வாக்குறுதி இருக்கிறது. நாம் அதை அடைய வேண்டிக்கொள்ள வேண்டும். தேற்றரவாளனிடமிருந்தும் சமாதானப் பிரபுவிடமிருந்தும் எழும் நாளில் தம் வேலைகளில் இருந்து ஓய்வுடன் இருந்த மகிமையான பிதாவிடமிருந்தும் இளைப்பாறுதல் வருகிறது. தேவனோடு இருப்பதே இளைப்பாறுவதாகும்.
Charles H. Spurgeon