“If any man serve me, let him follow me; and where I am, there shall also my servant be: if any man serve me, him will my Father honor.” John 12:26.
The highest service is imitation. If I would be Christ’s servant I must be His follower. To do as Jesus did is the surest way of bringing honor to His name. Let me mind this every day.
If I imitate Jesus I shall have His company: if I am like Him I shall be with Him. In due time He will take me up to dwell with Him above, if, meanwhile, I have striven to follow Him here below. After His suffering our Lord came to His throne, and even so, after we have suffered a while with Him here below, we also shall arrive in glory. The issue of our Lord’s life shall be the issue of ours: if we are with Him in His humiliation we shall be with Him in His glory. Come, my soul, pluck up courage and put down thy feet in the blood-marked footprints which thy Lord has left thee.
Let me not fail to note that the Father will honor those who follow His Son. If He sees me true to Jesus, He will put marks of favor and honor upon me for His Son’s sake. No honor can be like this. Princes and emperors bestow the mere shadows of honor; the substance of glory comes from the Father. Wherefore, my soul, cling thou to thy Lord Jesus more closely than ever.
பின்பற்றினால் கனம்பண்ணப்படுவாய்
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். யோ.12:26.
சிறந்த ஊழியம் கிறிஸ்துவைப் பின்பற்றுதல் ஆகும். நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனாய் இருக்கவேண்டுமானால் அவரைப் பின்பற்றுகிறவனாய் இருக்கவேண்டும். இயேசு செய்ததைச் செய்வதுதான் அவர் நாமத்தைக் கனம் அடையச் செய்வதற்கு சிறந்த வழி ஆகும். நான் ஒவ்வொரு நாளும் இவ்விதம் செய்வேனாக!
நான் இயேசுவைப் பின்பற்றினால் அவர் என்னோடு இருப்பார். இங்கு நான் அவரைப் பின்பற்ற மனமார முயற்சி செய்திருந்தால் ஏற்ற காலத்தில் அவரோடு இருப்பதற்காக என்னை எடுத்துக்கொள்வார். பாடுகள்பட்டபின் நம் ஆண்டவர் தம் சிங்காசனத்தை அடைந்தார். அதேவிதமாக நாமும் இங்கு அவரோடு சிறிதுகாலம் பாடுபட்டிருந்தால் மகிமையடைவோம். நம் ஆண்டவருடைய வாழ்க்கையின் பலனே நம்முடைய வாழ்க்கையின் பலனும் ஆகும். அவருடைய தாழ்ந்த நிலையில் நாம் பங்கெடுத்து இருந்தால் அவர் மகிமையில் அவரோடு இருப்போம். என் ஆன்மாவே, தைரியங்கொள். உன் ஆண்டவர் உனக்குவிட்டுச் சென்றிருக்கும் இரத்தம் தோய்ந்த அடிச்சுவட்டில் உன் பாதங்களையும் எடுத்துவை.
தம் குமாரனைப் பின்பற்றுகிறவர்களைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் என்பதை நான் கவனிக்கத் தவறமாட்டேன். நான் இயேசுவுக்கு உண்மையுள்ளவனாய் இருப்பதை அவர் கண்டால், அவர் குமாரனுக்காக எனக்குக் கருணை காட்டி, மகிமைப்படுத்துவார். இதற்கொத்த மகிமை வேறு எதுவும் இல்லை. அரசர்களும் சக்கரவர்த்திகளும் அளிக்கும் பட்டங்களும் பதவிகளும் நிழல்கள் போன்றவையே. உண்மையான மகிமை பிதாவிடமிருந்தே வருகிறது. ஆகவே, என் ஆன்மாவே, உன் ஆண்டவராகிய இயேசுவை முன்பைவிட அதிகமாக நெருங்கிப் பற்றிக்கொள்.
Charles H. Spurgeon