“Trust in the Lord and do good; dwell in the land and enjoy safe pasture.” Psalm 37:3.

Trust and do are words which go well together, in the order in which the Holy Spirit has placed them. We should have faith, and that faith should work. Trust in God sets us upon holy doing: we trust God for good, and then we do good. We do not sit still because we trust, but we arouse ourselves and expect the Lord to work through us and by us. It is not ours to worry and do evil but to trust and do good. We neither trust without doing nor do without trusting.

Adversaries would root us out if they could; but by trusting and doing we dwell in the land. We will not go into Egypt, but we will remain in Immanuel’s land-the providence of God, the Canaan of covenant love. We are not so easily to be got rid of as the Lord’s enemies suppose. They cannot thrust us Out nor stamp us out: where God has given us a name and a place, there we abide.

But what about the supply of our necessities? The Lord has put a “verily” into this promise. As sure as God is true, His people shall be fed. It is theirs to trust and to do, and it is the Lord’s to do according to their trust. If not fed by ravens, or fed by an Obadiah, or fed by a widow, yet they shall be fed somehow. Away, ye fears!

நம்பிக்கையோடுசெய், செய்துவிட்டு நம்பு

கர்த்தரை நம்பி நன்மை செய். தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொள். சங்.36:3.

நம்பு, செய் என்ற இரு சொற்களும் பரிசுத்த ஆவியானவர் அவற்றை வைத்திருக்கும் வரிசைப்படி நன்றாய்ப் பொருந்திப் போகின்றன. நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை கிரியை செய்ய வேண்டும். கடவுளை நம்புவது புனிதமான காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. நன்மைக்காகக் கடவுளை நம்புகிறோம். கடவுளை நம்புகிறதனால் நன்மை செய்கிறோம். நாம் நம்புவதனால் ஒன்றும் செய்யாமல் அமர்ந்து விடுவதில்லை. ஆனால் நாம் எழுந்து ஆண்டவர் நம் மூலமாகக் கிரியை செய்ய எதிர்பார்க்கிறோம். நாம் கவலைப்பட்டுத் தீமையைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நம்பி நன்மை செய்ய வேண்டும். நாம் கிரியை செய்யாமல் நம்புவதுமில்லை. நம்பாமல் கிரியை செய்வதுமில்லை. நம் எதிரிகளுக்குக் கூடுமானால் நம்மை வேரோடு அற்றுப் போகப் பண்ணலாம். ஆனால் நம்புவதாலும் கிரியை செய்வதாலும் நாம் நாட்டில் பிழைத்திருக்கிறோம். நாம் எகிப்துக்குப் போகமாட்டோம். ஆனால் கடவுளின் அருள் செயலும் உடன்படிக்கையின் அன்புமான கானானாகிய இம்மானுவேலின் நாட்டிலேயே தங்கியிருப்போம். ஆண்டவரின் எதிரிகள் நினைப்பது போல நம்மை எளிதாக அகற்றி விட முடியாது. கடவுள் நமக்கு எங்கு பெயரும் இடமும் கொடுத்திருக்கிறாரோ அங்கு தங்கியிருப்போம்.

ஆனால் நமக்குத் தேவையானவை எப்படிக் கிடைக்கும்? இந்த வாக்குறுதியில் ஆண்டவர் மெய்யாகவே என்னும் வார்த்தையையும் சேர்த்திருக்கிறார். ஆண்டவர் உண்மையாய் இருக்கிறது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் அவர் மக்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் நம்பி செய்யப்பட்டால், ஆண்டவர் அவர்கள் நம்பிக்கையின்படி கிரியை செய்வார். அவர்களுக்குக் காகங்களினாலாவது, ஓபதியாவினாலாவது, ஒரு விதவையினாலாவது உணவு அளிக்கப்படா விட்டாலும், அவர்கள் எப்படியாவது உணவைப் பெறுவார்கள். ஆகையால் பயமே என்னை விட்டு அகன்று போ!

Charles H. Spurgeon