“It shall come to pass, that at evening time it shall be light.” Zechariah 14:7.
It is a surprise that it should be so; for all things threaten that at evening I time it shall be dark. God is wont to work in a way so much above our fears and beyond our hopes that we are greatly amazed and are led to praise His sovereign grace. No, it shall not be with us as our hearts are prophesying: the dark will not deepen into midnight, but it will on a sudden brighten into day. Never let us despair. In the worst times let us trust in the Lord who turneth the darkness of the shadow of death into the morning. When the tale of bricks is doubled Moses appears, and when tribulation abounds it is nearest its end.
This promise should assist our patience. The light may not fully come till our hopes are quite spent by waiting all day to no purpose. To the wicked the sun goes down while it is yet day: to the righteous the sun rises when it is almost night. May we not with patience wait for that heavenly light, which may be long in coming but is sure to prove itself well worth waiting for?
Come, my soul, take up thy parable and sing unto Him who will bless thee in life and in death, in a manner surpassing all that nature has ever seen when at its best.
மாலை பகலாக மாறும்
சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். சக.14:7.
இவ்விதம் நடப்பது ஆச்சரியமாகும். ஏனெனில் சாயங்காலத்திலே இருட்டாகும் என்றே நாம் அறிந்திருக்கிறோம். கடவுள் நம் அச்சங்களுக்கு மேலும் நம்பிக்கைகளுக்கு அப்பாலும் செயல்படுவதால், நாம் வியப்படைந்து அவர் வல்லமையுள்ள கிருபையைப் போற்றத் தூண்டப்படுகிறோம். நம் இதயங்கள் முன்னறிவிப்பது போல் இருள் அதிகமாகி நடுநிசி வராது. ஆனால் திடீரென்று சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். நாம் கவலையடைய வேண்டியதில்லை. மிகப்பயங்கரமான நாளிலும் மரணத்தின் நிழலைக் காலையாக மாற்றக் கூடிய ஆண்டவரை நம்புவோமாக! இஸ்ரவேலர் செய்யவேண்டிய செங்கல்லின் அளவு இரண்டு மடங்கு ஆக்கப்படும்போது மோசே தோன்றினார். துன்பங்கள் அதிகமாகும் போது அவை முடிவடையும் காலம் வந்துவிட்டது என்று அறியலாம்.
இந்த வாக்குறுதி நம்மைப் பொறுமையுள்ளவர்கள் ஆக்கலாம். வீணாகப் பலநாள்கள் காத்திருந்து, நாம் நம்பிக்கை அற்ற நிலை அடையும்வரை முழு வெளிச்சமும் காணப்படாமல் இருக்கலாம். துன்மார்க்கருக்குப் பகலாய் இருக்கும் போதே, சூரியன் அஸ்தமித்து விடும். நீதிமான்களுக்கு இரவு நெருங்கும் போது சூரியன் உதயமாகி விடும். அந்தப் பரலோக வெளிச்சத்துக்கு நாம் காத்திருக்கக் கூடாதா? ஒருவேளை அது வரத்தாமதமாகலாம். ஆனால் அது வரும்போது நாம் காத்திருந்ததைக் குறித்து நாம் வருந்த மாட்டோம்.
என் ஆன்மாவே, இயற்கை ஒருக்காலும் கண்டிராத விதமாக வாழ்க்கையிலும் மரணத்திலும் உன்னை ஆசீர்வதிக்கப் போகிறவரைப் பாடித்துதி.
Charles H. Spurgeon