About Joseph he said: “May the Lord bless his land with the precious dew from heaven above and with the deep waters that lie below;” Deuteronomy 33:13.

We may be rich in such things as Joseph obtained, and we may have them in a higher sense. Oh, for “the precious things of heaven”!

Power with God and the manifestation of power from God are most precious. We would enjoy the peace of God, the joy of the Lord, the glory of our God. The benediction of the three divine Persons in love, and grace, and fellowship we prize beyond the most fine gold. The things of earth are as nothing in preciousness compared with the things in heaven.

“The dew.” How precious is this! How we pray and praise when we have the dew! What refreshing, what growth, what perfume, what life there is in us when the dew is about. Above all things else, as plants of the Lord’s own right hand planting, we need the dew of His Holy Spirit.

“The deep that coucheth beneath.” Surely this refers to that unseen ocean underground which supplies all the fresh springs which make glad the earth. Oh, to tap the eternal fountains! This is an unspeakable boon; let no believer rest till he possesses it. The all-sufficiency of Jehovah is ours forever. Let us resort to it now.

செல்வம்

யோசேப்பைக் குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக அது வானத்தின் செல்வத்தினாலும் பனியினாலும் ஆழத்திலுள்ள நீரூற்றுக்களினாலும்……. உபா.33:13.

யோசேப்புக்குக் கிடைத்த செல்வத்தைப் போல் நாமும் செல்வம் உள்ளவர்களாய் இருக்கலாம். ஆயினும் வானத்தின் செல்வத்தைப் பெற்றிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடவுளோடு ஆற்றலும் கடவுளிடமிருந்து பெற்ற ஆற்றலின் எடுத்துக்காட்டுகளும் எவ்வளவு சிறப்பானவை என்று நினைத்துப் பாருங்கள். கடவுளின் சமாதானத்தையும் ஆண்டவரின் மகிழ்ச்சியையும் கடவுளின் மகிமையையும் அனுபவிப்போம். நம் ஆசீர்வாதத்தில் எடுத்துக்கூறப்படும் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமுமான தூயவர் மூவரின் ஆசீர்வாதங்கள் பொன்னை விட நமக்குச் சிறப்பானவை. வானத்தின் செல்வத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது உலகப்பிரகாரமான செல்வங்கள் ஒன்றுமில்லாதவை ஆகும்.

பனி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று பாருங்கள்! பனிபெய்யும்போது நாம் எவ்விதமாயெல்லாம் ஜெபித்து புகழ்ந்து போற்றுகிறோம்! பனிப் பெய்யும்போது நம்மில் எப்படிப்பட்ட கிளர்ச்சி, வளர்ச்சி, மணம், உயிர் எல்லாம் காணப்படுகின்றன! எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஆண்டவர் தமது வலது கையினால் நட்ட செடிகளாகிய நமக்கு அவர் பரிசுத்த ஆவியாகிய பனி மிகவும் தேவையாகும்.

ஆழத்திலுள்ள நீரூற்றுக்கள் நிச்சயமாக இது உலகிற்கு மகிழ்ச்சி ஊட்டுவனவாக சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து வரும் நீரூற்றுக்களைக் குறிப்பதாகும். நித்தியமாய் வற்றாதவையான நீரூற்றுக்களை வடியவிடுதல் எவ்வளவு நல்லதாகும்! இது வாய்விட்டு விவரிக்க இயலாத வரமாகும்! ஒவ்வொரு விசுவாசியும் இதை அடையும்வரை இளைப்பாறாமல் இருக்கட்டும். எல்லாருக்கும் எப்போதைக்கும் போதுமானதான யேகோவாவின் இந்த வரம் நமக்கு நித்தியமாய்க் கிடைக்கக் கூடியது. நாம் இப்போதே அதை விரும்பி அணுகுவோமாக!

Charles H. Spurgeon