“So do not fear, for I am with you; do not be dismayed, for I am your God. I will strengthen you and help you; I will uphold you with my righteous right hand.” Isaiah 41:10.
When called to serve or to suffer, we take stock of our strength, and we find it to be less than we thought and less than we need. But let not our heart sink within us while we have such a word as this to fall back upon, for it guarantees us all that we can possibly need. God has strength omnipotent; that strength He can communicate to us; and His promise is that He will do so. He will be the food of our souls and the health of our hearts; and thus He will give us strength. There is no telling how much power God can put into a man. When divine strength comes, human weakness is no more a hindrance.
Do we not remember seasons of labor and trial in which we received such special strength that we wondered at ourselves? In the midst of danger we were calm, under bereavement we were resigned, in slander we were self-contained, and in sickness we were patient. The fact is that God gives unexpected strength when unusual trials come upon us, We rise out of our feeble selves. Cowards play the man, foolish ones have wisdom given them, and the silent receive in the self-same hour what they shall speak, My own weakness makes me shrink, but God’s promise makes me brave. Lord, strengthen me “according to thy word.”
புற ஆதாரங்களிலிருந்து உதவி
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். ஏசா.41:10.
சேவை செய்யவாவது பாடு அனுபவிக்கவாவது அழைக்கப்படும்போது நாம் நம் ஆற்றலைக் கணக்கெடுக்கிறோம். அது நாம் எதிர்பார்த்ததற்கும் நமக்குத் தேவையான அளவுக்கும் குறைவாய் இருப்பதைக் கண்டறிகிறோம். ஆனால் மேற்கூறப்பட்ட வாக்கியம் நமக்கு அருளப்பட்டிருக்கும் போது நம் உள்ளம் கலங்க வேண்டியதில்லை. ஏனெனில் நமக்குத் தேவையானவை எல்லாம் அளிக்கப்படுவதாக ஊறுதியுரை அளிக்கப்பட்டுள்ளது. கடவுள் எல்லாம் வல்லவர், அவர் நமக்குப் பகிர்ந்து கொடுக்கக் கூடியவர். அவர் அவ்விதம் செய்வதாக வாக்களித்தும் இருக்கிறார். அவர் நம் ஆன்மாவின் உணவாகவும் நம் உள்ளத்தின் நலமாகவும் இருந்து, நமக்கு ஊக்கம் அளிப்பார். கடவுள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆற்றல் அளிக்கக் கூடும் என்பதை விரிந்துரைக்க இயலாது. பரம ஆற்றல் கிடைத்ததும் மனித பெலவீனம் எதற்கும் தடையாய் இருக்க முடியாது.
கடுமையான உழைப்பிலும் சோதனையிலும் உழன்ற காலங்களில் சிறப்பான ஆற்றல் பெற்று, நாம் வலிமையடைந்ததைக் குறித்து வியப்படைந்தது நம் நினைவில் இல்லையா? ஆபத்துக் காலத்தில் அமைதியாய் இருந்திருக்கிறோம். இழப்பு ஏற்பட்டபோது அடங்கி இருந்திருக்கிறோம். பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்ட போது தன்னிறைவு உள்ளவர்களாய் இருந்திருக்கிறோம். நோய்வாய்ப்பட்டபோது பொறுமையாய் இருந்திருக்கிறோம். வழக்கத்திற்கு மாறான சோதனை ஏற்படும் போது கடவுள் எதிர்பாராத ஆற்றல் அளிக்கிறார் என்பது உண்மை. நாம் ஆற்றலற்ற நிலையிலிருந்து எழுச்சியடைகிறோம். கோழைகள் ஆண்மை ஆற்றல் அடைகிறார்கள். பேதைகள் அறிவு பெறுகிறார்கள். அமரிக்கையானவர்கள் அந்நேரத்தில் எதைப்பேச வேண்டுமோ அதைப்போசும் திறன் அடைகிறார்கள். என் பெலவீனம் என்னைப் பின் வாங்கச் செய்கிறது. ஆனால் கடவுளின் வாக்குறுதி எனக்குத் துணிச்சல் அளிக்கிறது. ஆண்டவரே உம் வார்த்தைகளின்படி என்னை வலிமை உள்ளவனாக்கும்.
Charles H. Spurgeon