“All those the Father gives me will come to me, and whoever comes to me I will never drive away.” John 6:37.

Is there any instance of our Lord’s casting out a coming one? If there be so, we would like to know of it; but there has been none, and there never will be. Among the lost souls in hell there is not one that can say, “I went to Jesus, and He refused me.” It is not possible that you or I should be the first to whom Jesus shall break His word. Let us not entertain so dark a suspicion.

Suppose we go to Jesus now about the evils of today. Oh, this we may be sure?He will not refuse us audience or cast us out. Those of us who have often been and those who have never gone before?let us go together, and we shall see that He will not shut the door of His grace in the face of any one of us.

“This man receiveth sinners,” but He repulses none. We come to Him in weakness and sin, with trembling faith, and small knowledge, and slender hope; but He does not cast us out. We come by prayer, and that prayer broken; with confession, and that confession faulty; with praise, and that praise far short of His merits; but yet He receives us. We come diseased, polluted, worn out, and worthless; but He doth in no wise cast us out. Let us come again today to Him who never casts us out.

ஒருபோதும் தள்ளப்படமாட்டோம்

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. யோ.6:37.

தம்மிடம் வந்தவரை தம் ஆண்டவர் தள்ளிவிட்டதாக எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா? அப்படி இருந்தால் அதைப்பற்றி அறிந்து கொள்ள நமக்கு விருப்பம் உண்டு. ஆனால் அப்படி ஒரு இடத்திலும் சொல்லப்படவும் இல்லை சொல்லப்படப் போவதும் இல்லை. இழக்கப்பட்ட ஆன்மாக்களாய் நரகத்திலுள்ள ஒருவராவது நான் இயேசுவண்டை போனேன். அவர் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் என்று சொல்ல முடியாது. அவர் கொடுத்துள்ள வாக்கை உங்களிடமாவது என்னிடமாவது தவறமாட்டார். அப்படிப்பட்ட ஐயத்தை விட்டு ஒழிப்போமாக.

இக்காலத் தீமைகளைக் குறித்து இயேசுவோடு உரையாடுவதற்கென்று சென்றால் அவர் நம்மோடு பேசுவார் என்றும் நம்மைத் தள்ளிவிட மாட்டார் என்றும் திட்டமாய் நம்பலாம். அவரிடம் பலமுறை சென்றவர்களும் ஒருமுறை கூடச் செல்லாதவர்களுமாகச் சேர்ந்து, அவரண்டை போகலாம், வாருங்கள். நம்மில் ஒருவரின் முகத்திலாவது அறைந்தாற் போல் கிருபையின் கதவுகளை மூடிவிட மாட்டார்.

இவர் பாவிகளை ஏற்றுக் கொள்கிறார். ஒருவரையும் புறக்கணிப்பதில்லை என்று அவரைப் பற்றிச் சொல்லப்பட்டது. நாம் தளர்விலும் பாவத்திலும், ஊசலாடும் விசுவாசத்தோடும், குறைந்த அறிவோடும், ஒடுங்கிய நம்பிக்கையோடுமே அவரண்டை நெருங்குகிறோம். ஆனால் அவர் நம்மைத் தள்ளிவிடுவதில்லை. நாம் ஜெபத்தோடு போகிறோம் அந்த ஜெபமும் அரைகுறையானதாய் இருக்கிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு போகிறோம் அவ்விதம் ஒப்புக்கொள்வதும் குறையுடையதாய் இருக்கின்றது. அவரைத் துதித்துக் கொண்டு போகிறோம் அந்தத் துதியும் அவர் இரக்கங்களுக்கு ஏற்ற அளவாய் இருப்பதில்லை. ஆயினும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நாம் நோயுற்றவர்களாயும், மாசுபடுத்தப்பட்டவர்களாயும், பயன் அற்றவர்களாயும், மதிப்பு இல்லாதவர்களாயும் அவரண்டை வந்தாலும் அவர் ஒருபோதும் நம்மை ஒதுக்கித் தள்ளுவதில்லை. ஒருபோதும் புறக்கணிக்காதவரிடம் இன்றே மறுபடியும் செல்வோமாக!

Charles H. Spurgeon