“The Lord hath been mindful of us: he will bless us; he will bless the house of Israel; he will bless the house of Aaron.” Psalm 115:12.
I can set my seal to that first sentence. Cannot you? Yes, Jehovah has thought of us, provided for us, comforted us, delivered us, and guided us. In all the movements of His providence He has been mindful of us, never overlooking our mean affairs. His mind has been full of us?that is the other form of the word mindful. This has been the case all along and without a single break. At special times, however, we have more distinctly seen this mindfulness, and we would recall them at this hour with overflowing gratitude. Yes, yes, “the Lord hath been mindful of us.”
The next sentence is a logical inference from the former one. Since God is unchangeable, He will continue to be mindful of us in the future as He has been in the past; and His mindfulness is tantamount to blessing us. But we have here not only the conclusion of reason but the declaration of inspiration; we have it on the Holy Ghost’s authority?”He will bless us.” This means great things and unsearchable. The very indistinctness of the promise indicates its infinite reach. He will bless us after His own divine manner, and that forever and ever, Therefore, let us each say, “Bless the Lord, O my soul!”
எப்போதும் நினைவுள்ளவராய் இருக்கிறார்
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். சங்.115:12.
இந்த வாக்கியத்தின் முதற் பகுதிக்கு நான் என் முத்திரையிட்டு எனதாக்கிக்கொள்ள முடியும். நீங்களும் அவ்விதம் செய்ய முடியாதா? ஆம், யேகோவா நம்மை நினைத்திருக்கிறார் நமக்கு வேண்டியதைக் கொடுத்திருக்கிறார் ஆறுதல்படுத்தியிருக்கிறார். விடுதலை அளித்திருக்கிறார். வழிநடத்தியும் இருக்கிறார். அவர் அருள் செயல்களில் எல்லாம் நம்மை நினைத்திருக்கிறார். அற்பமான நம் விவகாரங்களை அவர் ஒருநாளும் புறக்கணித்ததில்லை. அவர் மனம் நம்மைப் பற்றிய எண்ணங்களால் நிறைந்திருக்கிறது. நினைத்திருக்கிறார் என்பது அதைத்தான் குறிக்கிறது. ஆதியிலிருந்தே இவ்விதம் இருந்திருக்கிறது. இதற்கு ஒருநாளும் ஒருதடையும் ஏற்பட்டதில்லை. சிறப்பான சமயங்களில் அவர் நம்மை நினைத்திருப்பதை நம் தெளிவாய்க் கண்டிருக்கிறோம். இப்போது அத்தருணங்களை நன்றியோடு நினைவு கூருவோமாக! ஆம் உண்மையாகவே கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்.
இந்த வாக்கியத்தின் இரண்டாம் பகுதி முதற் பகுதியிலிருந்து ஊகித்தறியும் கருத்தாகும். கடவுள் மாறாதவராயிருப்பதால் இறந்த காலத்தில் நம்மை நினைத்திருந்தது போல் எதிர் காலத்திலும் நினைப்பார். இவ்விதம் நினைத்திருப்பது நம்மை ஆசீர்வதிப்பதற்கு ஒப்பானதாகும். இங்கு காரணாகாரியத் தொடர்பை மட்டும் நாம் காணவில்லை. ஆனால் அகத்தூண்டுதலினால் நாம் வெளியிடுவதையும் காண்கிறோம். அவர் ஆசீர்வதிப்பார் என்பது பரிசுத்த ஆவியின் சான்றையும் உள்ளதாயிருக்கின்றது. இது ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் குறிக்கின்றது. இந்த வாக்குறுதின் பிரித்தறியக் கூடிய பண்புற்ற தன்மை, அது எல்லையற்றது என்பதைக் காட்டுகிறது. அவர் தெய்வீகக் கருத்துக்கேற்றபடி நம்மை நித்திய நித்தியமாய் ஆசீர்வதிப்பார். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என்று சொல்லுவோமாக!
Charles H. Spurgeon