“When you lie down, you will not be afraid; when you lie down, your sleep will be sweet.” Proverbs 3:24.
Is the reader likely to be confined for a while to the bed by sickness! Let him go upstairs without distress with this promise upon his heart “When thou liest down, thou shalt not be afraid.”
When we go to bed at night, let this word smooth our pillow. We cannot guard ourselves in sleep, but the Lord will keep us through the night. Those who lie down under the protection of the Lord are as secure as kings and queens in their palaces, and a great deal more so. If with our lying down there is a laying down of all cares and ambitions, we shall get refreshment out of our beds such as the anxious and covetous never find in theirs. Ill dreams shall be banished, or even if they come, we shall wipe out the impression of them, knowing that they are only dreams.
If we sleep thus we shall do well. How sweetly Peter slept when even the angel’s light did not wake him, and he needed a hard jog in the side to wake him up. And yet he was sentenced to die on the morrow. Thus have martyrs slept before their burning. “So he giveth his beloved sleep.” To have sweet sleep we must have sweet lives, sweet tempers, sweet meditations, and sweet love.
வலுவூட்டும் தூக்கம்
நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய். நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். நீதி.3:24.
இதை வாசிப்பவர் ஒருவேளை சிறிது காலம் வியாதிப்படுக்கையில் இருக்க வேண்டியதாயிருக்கிறதா? அப்படியானால் நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய் என்னும் வாக்குறுதியை மனதில் கொண்டு, வருத்தமின்றி படுக்கைக்குச் செல்.
இரவில் படுக்கைக்குப் போகும்போது இந்த வார்த்தை நமக்கு அமைதி அளிக்கட்டும் நாம் தூங்கும்போது நம்மைப் பாதுகாத்துக்கொள்ளமுடியாது. ஆனால் ஆண்டவர் இரவு முழுவதும் நம்மைப் பாதுகாப்பார். ஆண்டவரின் பாதுகாப்பில் படுத்துக்கொள்ளுகிறவர்கள் அரண்மனைகளிலுள்ள அரசரையும் அரசிகளையும்விட அதிகமான பாதுகாப்பு உள்ளவர்கள் ஆகிறார்கள். நாம் படுத்துக்கொள்ளும்போது நம்முடைய கவலைகளையும் புகழார்வங்களையும் கைவிடுகிறவர்களாயிருந்தால், கவலைப்படுகிறவர்களும் பிறர் பொருளை இச்சிக்கிறவர்களும் பெறாதவிதமாய் நம் தூக்கத்தினால் புது வலு பெறுவோம். கெட்ட சொப்பனங்கள் அகற்றப்படும். அப்படியே அவை வந்தாலும் அவை சொப்பனங்கள்தானே என்று அவற்றால் ஏற்பட்ட கருத்தை மறந்துவிடுவோம்.
இவ்விதமாய் நித்திரை செய்தல் நமக்கு நல்லது. பேதுரு மறுநாள் மரணமடைய வேண்டும் என்று தீர்ப்பு பெற்றிருந்தாலும் எவ்வளவு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். தேவதூதனிடம் வெளிச்சம்கூட அவனை விழிப்படையச் செய்யவில்லை. அவனை விலாவிலே தட்டி எழுப்பவேண்டியதாயிருந்தது. இரத்தசாட்சிகள் எரிக்கப்படும் முன்னும் அவ்விதமே தூங்கினார்கள். அவரே தமக்குப் பிரியமானவருக்கு நித்திரை அளிக்கிறார். இன்பமான நித்திரைபெற நம் வாழ்க்கை இன்பமானதாயிருக்க வேண்டும். நம் மனநிலை இன்பமானதாய் இருக்கவேண்டும். நம் தியானம் இன்பமானதாய் இருக்கவேண்டும். நம் அன்பு இன்பமானதாய் இருக்கவேண்டும்.
Charles H. Spurgeon