“Great peace have those who love your law, and nothing can make them stumble.” Psalm 119:165.
Yes, a true love for the great Book will bring us great peace from the great God and be a great protection to us. Let us live constantly in the society of the law of the Lord, and it will breed in our hearts a restfulness such as nothing else can. The Holy Spirit acts as a Comforter through the Word and sheds abroad those benign influences which calm the tempests of the soul.
Nothing is a stumbling block to the man who has the Word of God dwelling in him richly. He takes up his daily cross, and it becomes a delight. For the fiery trial he is prepared and counts it not strange, so as to be utterly cast down by it. He is neither stumbled by prosperity?as so many are?nor crushed by adversity?as others have been?for he lives beyond the changing circumstances of external life. When his Lord puts before him some great mystery of the faith which makes others cry, “This is an hard saying; who can hear it?” the believer accepts it without question; for his intellectual difficulties are overcome by his reverent awe of the law of the Lord, which is to him the supreme authority to which he joyfully bows. Lord, work in us this love, this peace, this rest, this day.
திருமறையின் உயர்வு
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர்களுக்கு இடறலில்லை. சங்.119:165.
ஆம். மேலான இந்தப் புத்தகத்தை உண்மையாகவே நேசிப்பவர்கள் மகத்துவமான கடவுளின் சமாதானத்தைப் பெறுவார்கள். அது அவர்களின் பாதுகாப்பாயும் இருக்கும். நாம் ஆண்டவரின் கட்டளைகளை எப்போதும் உணர்ந்தவர்களாக வாழ்வோமாக. அது வேறெதுவும் கொடுக்கக்கூடாத சமாதானத்தை நம் இதயங்களில் உண்டாக்கும். திருமறையின் வார்த்தைகள்மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் தேற்றரவாளனாகக் கிரியை செய்து ஆத்துமத்தின் மனக் கொந்தளிப்பை அடக்கச் சாதகமான சக்திகளை வெளியே நிலவ விடுகிறார்.
திருமறையின் வாசகங்களை நிறைவாகத் தன் மனதில் வைத்திருக்கும் மனிதனுக்கு ஏதும் முட்டுக்கட்டையாய் இருக்காது. அவன் ஒவ்வொரு நாளும் தன் சிலுவையைச் சுமக்க ஆயத்தமாயிருக்கிறான். அது அவனுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. கொடிய சோதனைக்கும் அவன் ஆயத்தமாயிருந்து அது புதியதொரு அனுபவம் என்று கருதாதபடியால் அதனால் தளர்வடைவதில்லை. பலரைப்போல் அவன் வளமையான வாழ்வினால் இடறலடைவதில்லை. துன்பமான வாழ்வினால் மனம் உடைந்துபோவதுமில்லை. ஏனெனில் வெளி வாழ்க்கையின் மாறுதல்கள்மேல் அவன் அக்கறை காட்டுவதில்லை. மற்றவர்கள் இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பாhகள்? என்று கேட்கும் நிலைக்குக் கொண்டு சேர்க்கும் விசுவாசத்தைக் குறித்த ஏதாவதொரு கடினமான மறைபொருளை ஆண்டவர் அவர் பங்காக்கினால் விசுவாசி யாதொரு கேள்வியும் கேட்காமல் அதை ஏற்றுக்கொள்கிறான். ஏனெனில் அவனுடைய அறிவுத்திறனைச் சார்ந்த இக்கட்டுகள் எல்லாம் ஆண்டவரின் கட்டளைகள்மேல் அவருக்குள் பயபக்தியினால் மேற்கொள்ளப்படுகின்றன. அக்கட்டளைகளே அவன் வாழ்க்கைக்கான மேலான ஆணைகள். அவன் மகிழ்ச்சியுடன் அவற்றிற்குப் பணிந்து வாழ்கிறான். ஆண்டவரே, இன்று என்னில் இவ்விதமான அன்பும் சமாதானமும் அமைதியும் ஏற்படக் கிரியை செய்யும்.
Charles H. Spurgeon