“Yet I will remember the covenant I made with you in the days of your youth, and I will establish an everlasting covenant with you.” Ezekiel 16:60.
Notwithstanding our sins, the Lord is still faithful in His love to us. He looks back. See how He remembers those early days of ours when He took us into covenant with Himself, and we gave ourselves over to Him. Happy days those! The Lord does not twit us with them and charge us with being insincere. No, He looks rather to His covenant with us than to our covenant with Him. There was no hypocrisy in that sacred compact, on His part, at any rate. How gracious is the Lord thus to look back in love!
He looks forward also. He is resolved that the covenant shall not fail. If me do not stand to it, He does. He solemnly declares, “I will establish unto thee an everlasting covenant.” He has no mind to draw back from His promises. Blessed be His name, He sees the sacred seal, “the blood of the everlasting covenant,” and He remembers our Surety, in whom He ratified that covenant, even His own dear Son; and therefore He rests in His covenant engagements. “He abideth faithful; he cannot deny himself.”
O Lord, lay this precious word upon my heart and help me to feed upon it all this day!
பின்னோக்கியும் முன்னோக்கியும்
ஆகிலும் உன் இளவயதில் உன்னோடே பண்ணின உன் உடன் படிக்கையை நான் நினைத்து நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். எசேக்.16:60.
நாம் பாவிகளாயிருந்தாலும் ஆண்டவர் நம்மேல் அன்பு கூருகிறவராய் இருக்கிறார்.
அவர் பின்னோக்கிப் பார்க்கிறார். ஆதிநாட்களில் அவர் நம்மோடு உடன்படிக்கை செய்ததையும் நாம் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்ததையும் நினைத்துப் பார்க்கிறார். அவை மகிழ்ச்சியான நாட்கள். அவற்றைக்குறித்து நம்மைக் கடிந்து கொள்ளாமலும் வாய்மையற்றவர்களாய் இருந்ததற்காக நம்மேல் குற்றம் சாட்டாமலும் இருக்கிறார். நாம் அவரோடு செய்த உடன்படிக்கையை நினைத்துப் பார்க்காமல் அவர் தம்மோடு செய்த உடன்படிக்கையை நினைத்துப் பார்க்கிறார். அத்தூய ஒப்பந்தத்தில் அவர் பங்கில் மாய்மாலமே இல்லை. அவ்விதம் அன்புடன் பின்னோக்கிப் பார்க்கிறவர் எவ்வளவு கருணை நிறைந்தவர் என்று நினைத்துப் பாருங்கள்.
அவர் முன்னோக்கியும் பார்க்கிறார். அந்த உடன்படிக்கையை கைவிடக்கூடாது என்னும் தீர்;மானம் உள்ளவராய் அவர் இருக்கிறார். நாம் அதில் நிலைத்திருக்காவிட்டாலும் அவர் நிலைத்திருக்கிறார். அவர் நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன் என்று மதிப்பார்வத்துடன் உறுதியாகக் கூறுகின்றார். தம் வாக்குறுதியிலிருந்து அவர் பின்வாங்கவே மாட்டார். அவர் நாமம் மகிமைப்படுவதாக.
ஆண்டவரே இந்த மேன்மையான வார்த்தைகளை மனதில் என் வைத்து நான் ஒவ்வொரு நாளும் அவற்றை நினைவு கூர்ந்து பெலனடைய உதவி செய்யும்.
Charles H. Spurgeon