“The law of his God is in his heart; none of his steps shall slide.” Psalm 37:31.
Put the law into the heart, and the whole man is right. This is where the law should be; for then it lies, like the tables of stone in the ark, in the place appointed for it. In the head it puzzles, on the back it burdens, in the heart it upholds.
What a choice word is here used, “the law of his God”! When we know the Lord as our own God His law becomes liberty to us. God with us in covenant makes us eager to obey His will and walk in His commands. Is the precept my Father’s precept? Then I delight in it.
We are here guaranteed that obedient-hearted man shall be sustained in every step that he takes. He will do that which is right, and he shall therefore do that which is wise. Holy action is always the most prudent, though it may not at the time seem to be so, We are moving along the great highroad of God’s providence and grace when we keep to the way of His law. The Word of God has never misled a single soul yet; its plain directions to walk humbly, justly, lovingly, and in the fear of the Lord are as much words of wisdom to make our way prosperous as rules of holiness to keep our garments clean. He walks surely who walks righteously.
வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. சங்.37:51.
வேதத்தில் கூறப்பட்டிருப்பவைகளை மனதில் வைத்திருக்கும் மனிதனின் நடைகள் சரியானவையாய் இருக்கும். வேதம் இருதயத்தில் தான் இருக்கவேண்டும். ஏனெனில் கற்பனைகள் அடங்கிய கற்பலகைகள் உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது போல் வேதத்திற்கென்று குறிக்கப்பட்ட இடம் இருதயம்தான். வேதத்தைக் குறித்து நினைத்துப் பார்த்தால் குழப்பமாயிருக்கும். அதைச் சுமப்பது கடினமாய்த் தெரியும். ஆனால் அது இருதயத்தில் இருந்தால் ஆதரவளிக்கும்.
அவனுடைய தேவன் அருளிய வேதம் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். தேவன் நம்முடைய கடவுள் என்று நாம் அறிந்தால் அவர் வேதம் நம் தனி உரிமை ஆகிறது. கடவுள் நம்மோடு செய்த உடன்படிக்கை அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படியவும் நம்மை ஆவல் உள்ளவர்கள் ஆக்குகிறது. எந்தக் கட்டளையும் என் பிதாவினுடைய கட்டளையானால் அதைக் கைக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கீழு;ப்படிதலிலுள்ள மனிதன் அவன் நடைகளில் தாங்கிப் பிடிக்கப்படுவான் என்று நமக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. அவன் சரியானவைகளையே செய்வதால் விவேகமானவைகளைச் செய்வான். தூயசெயல்கள் எப்போதும் அறிவு நுட்பம் வாய்ந்தவையாய் இருக்கும். ஒருவேளை அவற்றைச் செய்யும்போது அப்படிப்பட்டவையாய்த் தோன்றாமல் இருக்கலாம். கடவுளின் வேதம் கூறுகிற பாதையில் நாம் நடந்தால் கடவுளின் அருளும் கிருபையும் நிறைந்த நெடுஞ்சாலையில் நடக்கிறவர்களாய் இருப்போம். இந்நாள்வரை கடவுளின் வார்த்தை யாரையும் தவறான பாதையில் நடத்தியதில்லை. நம் ஆடைகளைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ள தூய வழிகளைப் போல் தாழ்மையுள்ளவர்களாயும் நீதியுள்ளவர்களாயும் அன்புள்ளவர்களாயும் கடவுள் பயமுள்ளவர்களாயும் நடக்கச்சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் நம் பாதையை வளமாக்கக் கூடியவை. நீதியான பாதையில் நடப்பவர்கள் உறுதியாய் நடப்பவர்கள் ஆவார்கள்.
Charles H. Spurgeon